Published:Updated:

திருச்சி ஸ்பெஷல்!

திருச்சி ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சி ஸ்பெஷல்!

சு.சவ்பாக்யதா, ரா.சுஜிதா

திருச்சி ஸ்பெஷல்!

வண்ணத்துப்பூச்சி பூங்கா

திருச்சி ஸ்பெஷல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா இருப்பது திருச்சி அருகில்தான். தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து மேற்கே 6.கி.மீ தொலைவிலும், காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரியும் இடமான முக்கொம்பிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 27 நட்சத்திரங்களுக்குரிய 27 வகை மரங்களைகொண்ட நட்சத்திர வனம் அமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்ற பல்வேறு வகை மலர்ச்செடிகள், குறுஞ்செடிகள், புற்கள் போன்றவையும் வளர்க்கப்படுகின்றன. சிறுவர் விளையாட்டுப் பூங்காவும் உள்ளது.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி ஸ்பெஷல்!

திருச்சி என்றதும் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை. 273 அடி உயரம்கொண்ட இந்த மலைப்பாறை ஒரு பில்லியன் ஆண்டு பழைமையானது என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். கி.பி.580 -ல் உருவாக்கப்பட்ட பல்லவர் காலக் குகைக் கோயில் இதன் சிறப்பு. 10ஆம் நூற்றாண்டில் சோழர்களின் ராஜ்ஜியமாக இருந்தது. 14ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் கைப்பற்றினார். கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், இடையே தாயுமானவர் கோயில் என அமைந்துள்ளது.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்!

திருச்சி ஸ்பெஷல்!

ந்தியாவிலேயே திருச்சியில்தான் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Center for Banana – NRCB) அமைந்துள்ளது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால், 1993 ஆகஸ்ட் 21ம் தேதி, திருச்சியின் தாயனுரில் போதாவூர் என்ற இடத்தில் உள்ளது. வாழை உற்பத்தி, புதிய ரகங்களை உருவாக்குது போன்ற பல்வேறு ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. திசு வளர்ப்பு ஆய்வகம், உயிர் தொழில்நுட்பவியல் ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகம், உயிர்வேதியியல் ஆய்வகம், பூச்சியியல் ஆய்வகம் பூஞ்சை மற்றும் பாக்டீரியா சம்பந்தபட்ட ஆய்வகம் போன்றவையும் இங்குள்ளன.

திருச்சி துணுக்கு...

● தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழைமையான நகரங்களில் ஒன்று திருச்சி. இந்நகரத்தின் வரலாறு கிமு 2000ஆம் காலத்துக்கு முந்தையது.

● கரிகால் சோழன் கட்டிய உலகின் மிகப் பழைமையான அணையான, கல்லணை இருப்பது திருச்சியின் உறையூரில்.

திருச்சி ஸ்பெஷல்!

● மதுரை நாயக்கர்களின் வழியில் வந்த ராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை, அரசு அருங்காட்சியகமாக செயல்படுகிறது.

● தமிழ்நாட்டின் மையப் பகுதியில் இருப்பதால், மாநிலத் தலைநகராக திருச்சிராப்பள்ளியை மாற்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் முயன்றுள்ளார்.

● இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), 1965-ல் இங்கு நிறுவப்பட்டது.

திருச்சி ஸ்பெஷல்!

* தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் தலைமைப் படைத் தலைவர், மாலிக் கபூர்.