Published:Updated:

மணக்கும் பருத்திப் பால்!

மணக்கும் பருத்திப் பால்!

பிரீமியம் ஸ்டோரி

துரை ஜிகர்தண்டா பற்றி எல்லோருக்கும் தெரியும். அதே மதுரையில் ஃபேமஸான ஒண்ணு இருக்கு தெரியுமா? அதுதான் பருத்திப்பால்.

மணக்கும் பருத்திப் பால்!

மதுரை, முனிச்சாலை பகுதியில் இருக்கு,‘திருமலை மடைகருப்புசாமி பருத்திப்பால்’ என்ற அந்தக் குட்டியான கடை. ‘‘வாங்க வாங்க புள்ளைங்களா... இவ்வளவு பேர் ஒண்ணா வந்திருக்கீங்களே’’ என்று முகம் முழுக்கச் சிரிப்புடன் வரவேற்றார் அந்தத் தாத்தா. அவர்தான் சந்தானம் ஐயா.

மணக்கும் பருத்திப் பால்!

90 வருடங்களாகப் பருத்திப்பால் கடை வைத்திருப்பவர். ‘‘உங்களைப் பேட்டி எடுக்க வந்திருக்கோம் தாத்தா’’ என்றதும், ‘‘தாராளமா எடுங்க. அதுக்கு முன்னாடி பருத்திப்பால் குடிங்க. மதுரையில் வேற எங்கேயும் இந்தச் சுவையில் குடிக்கவே முடியாது’’ என்றவர், பாட்டு பாடிக்கிட்டே பருத்திப்பால் ஊற்றிக்கொடுத்தார். அதன் சுவை போலவே அவரது பேச்சும் இருந்தது.

‘‘அப்பா காலத்திலிருந்து இதுதான் எங்க தொழில். குடும்பத்தோடு செய்துட்டிருக்கோம். மற்ற இடங்களில் வெல்லம், சீனி, எசென்ஸ் கலந்து செய்வாங்க. எங்க பருத்திப்பால் அப்படியில்லே, சுத்தமான கருப்பட்டி பருத்திப்பால் இது. சுக்கு, ஏலக்காய், கருப்பட்டி, திப்பிலி, தேங்காய் கலந்து செய்யறோம். இந்தப் பொருள்களையும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாங்கறோம்’’ என்றார் சந்தானம் தாத்தா.

மணக்கும் பருத்திப் பால்!

‘‘இந்தப் பருத்திப்பாலை எப்படி தயாரிக்கறீங்க?’’ என்று கேட்டோம்.

‘‘பருத்தி விதையை ஊறவெச்சு ஆட்டியெடுத்து பால் எடுப்போம். அதைக் காய்ச்சி, பச்சரிசி மாவு கலந்து கருப்பட்டியைக் காய்ச்சி ஊத்துவோம். மிதமான சூட்டோடு வாடிக்கையாளர்கள் கேட்கும் போது ஏலக்காய், திப்பிலி சேர்த்த பொடியைக் கலந்து கொடுப்பேன். நம்மகிட்ட ஸ்பெஷல் பருத்திப்பாலும் இருக்கு. அதுல நெய் சேர்ப்பேன். ஸ்பெஷல் பருத்திப்பால் 20 ரூபாய், சாதா பருத்திப்பால் 15 ரூபாய். நான் சினிமாவிலும் ஜூனியர் ஆர்டிஸ்டா நடிச்சிருக்கேன். நல்லா பாடுவேன். இப்போ எல்லோரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடுவோமா?’’ என்று சொல்லிவிட்டு உற்சாகமாகப் பாட ஆரம்பிச்சுட்டார் தாத்தா.

மணக்கும் பருத்திப் பால்!
மணக்கும் பருத்திப் பால்!

‘‘இப்போ விதவிதமா கூல்டிரிங்ஸ், ஜூஸ் வந்திருச்சே. உங்க பருத்திப்பால் வியாபாரம் எப்படி இருக்கு?’’ என்று கேட்டோம்.

‘‘ஆமாம் கண்ணுங்களா... முன்னாடி சமாளிக்க முடியாத கூட்டம் இருக்கும். இப்போ அந்த அளவுக்கு இல்லேன்னாலும், தேடிவந்து குடிக்கறவங்க இருக்காங்க. இப்போ, இதைத் தயாரிக்கிறதுக்கான செலவு அதிகமானாலும் தரத்தை விட்டுக்கொடுக்காம செய்யறோம். இது சுவைக்காக மட்டுமே குடிக்கிற பானம் கிடையாது.  உடல் உஷ்ணம், நெஞ்சு வலி, சளி போன்றவற்றை விரட்டும். ஊசி போட்டு மருந்து கொடுக்கிற டாக்டர், பணத்தை முக்கியமா நினைக்காம உடம்பை குணமாக்கணும்.  நானும் டாக்டர் மாதிரிதான். ஊசிக்குப் பதில் பருத்திப்பால்... எல்லோரும் இன்னொரு ஊசி போட்டுக்கறீங்களா?’’ என்று கேட்டு சிரிப்புடன் மறுபடியும் பாட ஆரம்பிச்சுட்டார் சந்தானம் தாத்தா!

 சுட்டி டீம்,  படங்கள்: ஈ.ஜே.நந்தகுமார், வி.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு