தூத்துக்குடி என்றதும் உப்பு மற்றும் முத்து நினைவுக்கு வரும். எங்கள் தூத்துக்குடி இன்னும் பல விஷயங்களுக்குப் புகழ்பெற்றது. அதில் சில...

அதிகமான நீர் நிறைந்த நிலமாக இருந்ததால், ‘தூத்துத் துறைமுகம்' என்று கூறினர். குடியிருப்பும் தோன்றிய பிறகு ‘தூத்துக்குடி' என்று ஆயிற்று. சில கல்வெட்டுகளில் ‘தூற்றிக்குடி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாலமி என்ற கிரேக்கப் பயணியின் நூலில், ‘சோஷிக் குரி'(சிறு குடி) என்று குறிப்பிட்டுள்ளார். அது, தூத்துக்குடியின் பெயரே என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.

ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடமாக தூத்துக்குடி இருந்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் ஓர் இயற்கைத் துறைமுகம்.

சுதந்திரப் போராட்டத்தின்போது வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் செலுத்திய, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார், புரட்சிக் கவிஞர் பாரதியார் போன்றவர்கள் பிறந்த மண் இது.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து, 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தூத்துக்குடி அனல்மின் நிலையமும், ஸ்பிக் உரத் தொழிற்சாலையும் மிகவும் புகழ்பெற்றவை.

தூத்துக்குடியில் ‘மக்ரூன்’ என்ற இனிப்பு மிகவும் பிரபலம்.

தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத் தேர் திருவிழா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா, உலகப் புகழ்பெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, கடலைமிட்டாய்க்குப் புகழ்பெற்றது.