பிரீமியம் ஸ்டோரி
குரங்குகளின் தாத்தா

ப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்பவை லெமூர். இவை குரங்குகளுக்கு முந்தைய இனத்தைச்  சேர்ந்தவை.  நாயின் முகம் போன்ற தோற்றத்துடன் காணப்படும்  இவற்றில் மூன்று வகைகள் உள்ளன.

குரங்குகளின் தாத்தா

●வரிவால் லெமூர் (Ring-tailed   lemur): நீண்ட கறுப்பு வெள்ளை வரிகளுடன் வால் இருக்கும். மடகாஸ்கர் தீவின் தென்பகுதியில் வசிக்கின்றன. கூட்டமாக வசிக்கும் இவை, பகலில் இரையைத் தேடிச்செல்லும். ஒரு கூட்டத்தில் சுமார் 30 வரிவால் லெமூர்கள் இருக்கும். இவற்றின் ஆயுட்காலம் 16 முதல் 19 ஆண்டுகள். மனிதர்கள் இவற்றைப் பிடித்து வளர்ப்பார்கள்.

குரங்குகளின் தாத்தா

●மூங்கில் லெமூர் (Bamboo lemur) சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலான ரோமத்தினைக் கொண்டிருக்கும். காதுகள் வட்டமாகவும் முடிகளுடனும் இருக்கும். 26-46 செ.மீ நீளமும் 2.5 கிலோ வரை எடையும் இருக்கும். மடகாஸ்கரின் மூங்கில் காடுகளிலேயே வாழ்கின்றன. பெரும்பாலும் மூங்கிலையே உண்ணும். 12 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

●பறக்கும் லெமூர் (flying lemur) அல்லது கோலுகோஸ் (Colugos): தென்கிழக்காசியாவில் வாழும் இவை அணில் போன்ற தோற்றத்தில் இருக்கும். மலேசியா, பிலிப்பைன்ஸ், கொச்சி பகுதியிலும் காணப்படுகின்றன. மரங்களிலேயே வாழும் பாலூட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு