
News
பென்சில் கேப்
ஹாய்... நம்மகிட்ட இருக்கிற பொருள்களை வெச்சே அழகான, சிம்பிளான கிராஃப்ட்ஸ் செய்யலாமா? இதோ... சொல்லித் தர்றாங்க, சென்னையைச் சேர்ந்த ஷோபனா. ஒன், டூ, த்ரீ... ரெடி!

தேவையானவை:
*சார்ட் பேப்பர் - 1
*பென்சில் - 1
*ஃபெவிக்கால்
*ஸ்கெட்ச்
*கத்தரிக்கோல்

செய்முறை:
ஸ்டெப் 1: விருப்பமான கலரில் சார்ட் பேப்பர் எடுத்து, பிடித்த கார்ட்டூனை வரைந்துகொள்ளவும்.
ஸ்டெப் 2: வரைந்த உருவத்தை வெட்டி எடுக்கவும்.
ஸ்டெப் 3: கண், காது, மூக்கு வரைந்து கார்ட்டூனை அழகுபடுத்தவும்.
ஸ்டெப் 4: ஸ்கெட்ச் பயன்படுத்தி அவுட்லைன் கொடுக்கவும்.
ஸ்டெப் 5: பென்சிலின் பின்புறம் ஃபெவிக்கால் தடவி, கார்ட்டூனை ஒட்டினால், அழகான பென்சில் கார்ட்டூன் தொப்பி தயார்!
- சு.சூர்யா கோமதி, படங்கள்: ப.சரவணக்குமார்