Published:Updated:

விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!
விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!

விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவின் `விண்’ சாதனை, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மே 22 அதிகாலை 5 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுத் தளத்திலிலிருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு, PSLV-C46 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவப் பகிர்வே இது.

விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!

நாளிதழில் இதுபற்றிய செய்தியைப் படித்ததும், நேரில் காணும் வாய்ப்புக்கு மின்னஞ்சல் மூலம் பதிவுசெய்தேன். அன்றைய தினம் அதிகாலை 3 மணியிலிருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. சுமார் 5,000 பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அரங்கம் இருந்தது. ஆராய்ச்சி மைய நிகழ்வுகளை அரங்கிலிருந்தே காணும் வகையில்

விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!

மிகப்பெரிய எல்.இ.டி. திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. PSLV-C46 ராக்கெட், விண்ணை நோக்கி மஞ்சள் ஒளியோடு பாய்ந்துசென்றதைப் பார்த்த காட்சி, என்றென்றும் என் மனதில் இருக்கும்.

இந்த ரிசாட்-2பி செயற்கைக்கோளானது, உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு உதவும் வகையில், இந்திய எல்லைப் பகுதியில் வலம் வரும். அனைத்து வானிலை மாற்றங்களிலும் அதிகத் திறனுடன் புகைப்படங்களை எடுக்கும் வகையில், ‘எக்ஸ் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சர்’ வகை ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கேமராக்கள் 2 முதல் 6 மீட்டர் விட்டத்திலுள்ள பகுதியை

விண்ணில் ஒரு மஞ்சள் வானவில்!

விண்ணிலிருந்தே 3D படமாக எடுத்து 2D க்கு மாற்றும். இதில் உள்ள கேமராக்கள், செயற்கைக்கோளின் சூழலுக்கு ஏற்ப தன் கோணங்களை மாற்றிக்கொண்டு, 24 மணி நேரமும் படங்கள் மற்றும் கண்காணிப்பு தகவல்களை அளிக்கும்.

இந்தச் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். 615 கிலோ எடையுடைய இந்த ராக்கெட், தரையிலிருந்து புறப்பட்ட 15 நிமிடம் 30 விநாடிகளில் செயற்கைக்கோளை 555 கி.மீ தூரத்தில் திட்டமிட்ட புவி வட்டச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.

இதில் ஒரு சிறப்பு, இந்தமுறைதான் முதன்முறையாக ராக்கெட் ஏவுதலை நேரடியாகப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில் நானும் ஒருவளாக இருந்தேன்.

-தி.ஸ்ரீஸ்வர்ணா, பி.பி.எஸ்.மில்லியனம் பள்ளி, கடலூர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு