Published:Updated:

சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!
சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

பிரீமியம் ஸ்டோரி
சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

தீபாவளி நேரத்தில் இரவு வானம் எப்படி இருக்கும்? வண்ண வண்ண மின்னல்கள் வெட்டியது போன்று வாணவேடிக்கைகளால் ஜொலிக்கும். அப்படித்தான் இருந்தது, மேக்ஸ் ஆடைகள் நிறுவனம், சென்னை மற்றும் கோவையில் நடத்திய ‘லிட்டில் ஐகான்’ நிகழ்ச்சி.

சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

ஃபேஷன் ஷோ, பாட்டு, நடனம், ஓவியம் என்று பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் 2 வயது முதல் 10 வயது வரையிலான சுட்டிகள் பலரும் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் தங்களது க்யூட் ரியாக்‌ஷன்களால் அனைவரின் மனங்களையும் வென்றார்கள்.

ஃபேஷன் ஷோ தொடங்கியதும், பல மேடைகளைப் பார்த்துப் பழகிய புரபஷனல் மாடல்கள் போல ஒவ்வொருவரும் கலர்ஃபுல் ஆடைகளில், ‘கேட் வாக்’ வந்தபோது, அந்த மேடையே ஒரு வானம் போலத் தோன்றியது. அதில், வானவில்லும் வண்ண மின்னல்களும் தோன்றியது போலிருந்தன.

சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

அடுத்து, தனித் திறமைகளுக்கான போட்டிகள் ஆரம்பித்தன. பிரேக் நேரத்தில், ‘சாக்லேட் வேணும்... சாக்லேட் வேணும்’ என்று அம்மாவிடம் சிணுங்கிக்கொண்டிருந்தாள்  அந்தக் குட்டிப் பெண் சஞ்சனா. பாடல் போட்டி தொடங்கியதும், ‘அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்’ என்று முழுப் பாடலையும் கொஞ்சமும் தடுமாற்றமின்றி பாடி அசரவைத்து, வின்னர் பட்டம் வென்றார்.

நடனப் போட்டியின்போது ஒவ்வொருவரும் பம்பரமாகச் சுழன்று, ரப்பராக வளைந்து   கைத்தட்டலை அள்ளினார்கள். நடுவராக இருந்த பாபா பாஸ்கரையும் ஒரு குத்து போட வைத்து பின்னியெடுத்தார்கள். இதில், ரித்விக் ரக்‌ஷன் என்ற சுட்டி, வின்னராக அறிவிக்கப்பட்டார்.

சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

இப்படி ஒவ்வொரு போட்டியிலும் பலரும் ஆல் ரவுண்டர்களாக வலம்வந்து, வெற்றியாளரை அறிவிப்பதில் நடுவர்களை திணறவைத்தார்கள்.

சென்னையில் நடிகர் நகுல், அவரின் மனைவி ஸ்ருதி, ‘சூப்பர் சிங்கர் பாடகர்’ நாராயணன், ஃபேஷன் கோரியோகிராஃபர் கரன், நடன கோரியோகிராஃபர் பாபா பாஸ்கரும், கோவையில் நடிகை ஜனனி ஐயரும் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வந்திருந்தனர்.

சுட்டி வானம் குட்டி மின்னல்கள்!

“போட்டிகள் ஆரம்பித்தது முதல் முடியும் வரை குட்டீஸ்களின் கான்ஃபிடன்ஸ் லெவல் கொஞ்சமும் குறையவில்லை. பெரியவங்களின் போட்டியில்கூட நடுவர்களாக இருந்து அசால்ட்டா மார்க் கொடுத்துடலாம். குட்டீஸ்களுக்கு மார்க் போடறது பெரிய சவால். இவங்க இதே வேகத்தில் போனாங்கன்னா இன்னும் ரெண்டு, மூ ணு வருஷத்தில் எங்கேயோ இருப்பாங்க” என்றார் நகுல்.

வெற்றிபெற்ற சுட்டிகள் அனைவருக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன. அதுபோலவே சேலம், ஓசூர், வேலூர், புதுச்சேரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள மேக்ஸ் ஷோ ரூம் கிளைகளில்  சிறப்பாக நடைபெற்றன.

- ச.ராம் சங்கர்,  படங்கள்: ஆ.வள்ளி சௌத்ரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு