பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

மரம்

50 ஆண்டுகள் ஆயுள்கொண்ட ஒரு மரத்தால், மனிதனுக்குச் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவிகள் கிடைக்கின்றன. 10 ஏர் - கண்டிஷனர் கொடுக்கும் காற்றை, ஒரு மரம் கொடுத்துவிடும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. ஆகவே, வீட்டுக்கு ஏசி வாங்கலாமா என்று யோசிக்கும் நேரத்தில், வீட்டுக்கு வெளியே ஒரு செடியை நடுவோம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

கறுப்பு ஆப்பிள்

ப்பிள் என்றதும் சிவந்த நிறம்தான் நினைவுக்கு வரும். ஆனால், திபெத் நாட்டில் விளையும் ‘பிளாக் டைமண்டு’ எனப்படும் ஆப்பிள்கள், கறுப்பு நிறத்தில் இருக்கும். நிறம்தான் கறுப்பே தவிர, சுவையில் மற்ற ஆப்பிள்களுக்குக் குறைந்ததில்லை. 1870 ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்ட இந்த வகை ஆப்பிள்கள், மற்ற ஆப்பிள்கள் போலவே சத்துகள் நிறைந்தவை. இந்த ஆப்பிளை உலரவைத்து பானம் தயாரிப்பார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஒட்டகம் ஒரு தகவல்

ட்டகம் என்ற உயிரினம் தோன்றாதிருந்தால், மனிதன் பாலைவனத்தில் கால் வைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அத்தகைய ஒட்டகங்களின் மேல் உதட்டில் ஒரு பிளவு இருக்கும். இரு நாசித்துவாரங்களுக்கு நடுவில் ஆரம்பிக்கும். மூக்கிலிருந்து வழியும் சளி, கீழே சிந்தாமல் இந்தப் பிளவு வழியே வாய்க்குள் சென்றுவிடும். ஒட்டகத்தின் உடல் வெப்பத்தை போக்கிக்கொள்ள இயற்கை உருவாக்கியிருக்கும் அமைப்பு இது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

மாறும் காலச்சக்கரம்

க்கரம் கண்டுபிடிக்கப்பட்டதுதான் நாகரிகத்தின் மிக முதன்மையான விஷயம் என்பார்கள். அந்தச் சக்கரமும் அறிவியல் வளர்ச்சியில் மாறத் தொடங்கிவிட்டது. அமெரிக்க ராணுவம், பனிப்பாதை, மலைப்பாதை என இடத்தின் தன்மைக்கு ஏற்ப தனது ராணுவ வண்டிகளுக்குச் சக்கரங்களை வடிவமைத்துள்ளது. இந்தச் சக்கரமானது, வண்டியை ஓட்டிச்செல்லும்போதே வட்டம், முக்கோணம் என மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு