மனிதனுக்கு மொத்தம் 32 பற்கள். தாயின் கருவில் இருக்கும்போதே பற்கள் உருவாகத் தொடங்கிவிடும்.

ஞானப்பற்கள் 4, கடைவாய்ப் பற்கள் 8, முன் கடைவாய்ப்பற்கள் 8, கோரைப்பற்கள் 4, வெட்டுப்பற்கள் 8

பிறந்த 6 மாதத்திலிருந்து 3 வயதுக்குள் 20 பற்கள் முளைக்கும். அதைப் பால் பற்கள் என்பார்கள்.

பால் பற்கள் 6 வயது முதல் விழத் தொடங்கும். அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் முளைக்கும்.

17 - 23 வயது வரை முளைக்கும் நான்கு கடைவாய்ப்பற்களைத்தான் ஞானப்பற்கள் (Wisdom Teeth) என்கிறார்கள்.

பால் பற்கள் மட்டுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். நிரந்தப் பற்கள் முளைக்கும்போது இளம்மஞ்சள் கலந்த வெள்ளை (Yellowish White) நிறமாக இருக்கும்.

முறையாகப் பராமரித்தால் ஒரு மனிதன் இறக்கும்வரை பற்கள் விழாது.

பற்களின் முதல் அடுக்கான எனாமல் (Enamel), மனித உடலிலேயே மிகவும் கடினமான பொருள்.

பிற உறுப்புகள் மீண்டும் குணமாவதுபோல், பற்கள் தானாக குணமாகாது. ஒருமுறை சேதமடைந்தால் மீண்டும் வளராது.

கைரேகையைப் போன்று பற்களின் வரிசை மற்றும் தோற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமாக இருக்கும்.

உலகிலேயே மிகப்பெரிய பாலூட்டியான நீலத்திமிங்கிலத்துக்கு பற்களே கிடையாது.

உலகத்திலேயே மிகவும் விலைமதிப்பான பல், ஐசக் நியூட்டன் உடையது. 1816-ம் ஆண்டு அவரது ஒரு பல் இன்றைய மதிப்பின்படி 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அது ஒரு மோதிரத்தில் பதிக்கப்பட்டது.

ஒரு நத்தையின் வாயில் 12,000 முதல் 20,000-க்கும் மேற்பட்ட பற்கள் இருக்கும்.

யானை கடைவாய்ப்பற்களை தானே அரைத்துவிடும். அந்த இடத்தில் புதிய பற்கள் முளைக்கும். ஒரு யானையின் வாழ்நாளில் 6 முறை இதேபோன்று நடக்கும்.

செல்லப்பிராணிகளான நாய்க்கு 42, பூனைக்கு 30 பற்கள் காணப்படும்.

-ஜெனி ஃப்ரீடா

என் கடைவாய்ப் பற்களின் நீட்சியே தந்தங்கள். இதை, ‘யானைக்கோடு’ என்பார்கள்!