பிரீமியம் ஸ்டோரி

‘‘இங்கே உள்ள படங்களைப் பாருங்கள்... காட்டுக்குள் பயணித்தபோது எடுத்தவை. கொடுத்துள்ள புதிர் கேள்விகளை வைத்து யோசியுங்கள். அடுத்த பக்கத்துக்கு வந்து உங்கள் விடைகளையும் அதற்கான காரணங்களையும் சரிபாருங்கள்’’ என்று சவால் விடுகிறார், இயற்கை ஆர்வலர், ரவீந்திரன் நடராஜன். நீங்க ரெடியா?

என்ன இது?

ந்தப் படத்தில் உள்ள கையெழுத்து பாய்ச்சல் மிக்க ஒருவரின் நகங்கள் போட்டது. அவர் யார் என்று தெரிகிறதா?

என்ன இது?
என்ன இது?

ரையில் கிடக்கும் இந்த முட்டைகள் எந்தப் பறவையுடையதாக இருக்கும்?

என்ன இது?
என்ன இது?

து கறையான் புற்று அல்ல, ஒரு பறவையின் வீடு. இப்படி மரப்பொந்தையொட்டி கூடு கட்டறவர் யாரு என்று சொல்லமுடியுமா?

என்ன இது?
என்ன இது?

ண்ணைத் தோண்டி எடுத்தது போல நகங்களால் இங்கே பஞ்ச் மார்க் வைத்திருக்கும் பலசாலி யார்?

என்ன இது?
என்ன இது?

ண்களால் ஊர்ந்துபோய் உற்றுப் பாருங்க... படத்தில் தேனடை போன்று இருப்பது என்ன சொல்லுங்க?

1.புலி

என்ன இது?

இது புலியின் நகக் கீறல்கள். இப்படி அடையாளம் வைப்பதற்குக் காரணம் உள்ளது. காட்டின் வலிமைமிக்க புலி, தனக்கான எல்லையை நிர்ணயம் செய்யும். ‘இங்கே நான் வசிக்கிறேன் வராதே’ என்று மற்ற புலிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை இது. மற்ற புலிகள், இந்த எல்லையைத் தாண்டி வராது. அப்படியும் வருவது என முடிவுசெய்துவிட்டால், அங்கே கடுமையான சண்டை நடந்து ஒரு புலி வெளியேற்றப்படும்.

2.கல் குருவி (indian courser)

என்ன இது?

கல்குருவிகள் வறண்ட நிலங்களிலும், புல்வெளிக் காடுகளிலும் வசிக்கும். நான்கு அல்லது ஐந்து பறவைகளாகத் திரியும். மிகவும் அச்சுறுத்தப்படும் வேளைகளில் மட்டுமே பறக்கும். மற்ற நேரங்களில் புற்களுக்கிடையில் ஓடித் திரியும். திறந்தவெளிகளில், ஆழ்ந்த பழுப்பு நிறப் புள்ளிகள்கொண்ட இரண்டு முட்டைகளை இட்டு அடைகாக்கும். மூன்று வாரங்களில் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், தாயின் இறக்கைகளையொட்டியே திரியும். பிறப்பிலேயே சிறப்பாக ஓடும் திறன் பெற்றவை இவை.

3.செந்தலை பஞ்சுருட்டான்

என்ன இது?

மண்ணையொட்டிய மரப்பொந்துகளிலோ அல்லது பாறையின் ஓட்டைகளிலோ வீடு அமைக்கும். மரங்களையொட்டி வாழ்வதால், பூச்சிகளை உண்ணும் பறவை. பச்சை நிறத்தை அதிகமாகவும், நீல நிறத்தை பின்பகுதி மற்றும் வயிற்றின் அடிப்பகுதியிலும் கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட தென்கிழக்காசியா வரையில் பரவியுள்ளன.

4.கரடி

என்ன இது?

கரடிகள் பொதுவாகப் பகலில் தூங்கி இரவில் உலாவும். இவற்றுக்குக் கேட்கும் திறனும் பார்வைத் திறனும் மிகக் குறைவு. மோப்ப சக்தி அதிகம். ஆண் கரடியின் எடை 150 கிலோவாகவும், பெண் கரடியின் எடை 100 கிலோவாகவும் இருக்கும். இது அழுத்தமாக ஒரு அடி கொடுத்தால் எந்த விலங்கும் கலங்கிப்போகும்.

5.பாம்புச் சட்டை

என்ன இது?

பாம்பின் தோல் செதில்களால் ஆனது. அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்போது தனது தோலை உறிக்கும். தவிர, ஒட்டுண்ணித் தொற்றைத் தவிர்ப்பதற்கும் ஆரோக்கியம் பேணுவதற்கும் இப்படிச் செய்கின்றன. இளம் வயது பாம்புகள், வாரத்துக்கு ஒருமுறை தோலை உரிக்கின்றன. பருவ வயதுடைய பாம்புகள், வாழும் சூழலைப் பொறுத்து ஆண்டுக்கு நான்கு முதல் எட்டு முறை சட்டையை நீக்கும்.

- ரா.கௌசல்யா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு