பிரீமியம் ஸ்டோரி
சாக்ஸ் பூனை

தேவையானவை:
பழைய சாக்ஸ் - 1, மணல் - 50 கிராம், டெக்கரேஷன் ரோப் - 1 மீட்டர், நூல், ஃபெவிக்கால், கூக்ளி ஐ, கத்தரிக்கோல், சார்ட் பேப்பர்

சாக்ஸ் பூனை

செய்முறை:

ஸ்டெப் 1: சாக்ஸில் மண்ணை நிரப்பவும்.

ஸ்டெப் 2: சாக்ஸ் பெரியதாக இருந்தால் மண் நிரப்பியது போக, மீதம் உள்ளவற்றைக் கத்தரித்துவிடவும்.

ஸ்டெப் 3: சாக்ஸின் வாய்ப் பகுதியைப் படத்தில் காட்டியபடி நூலால் கட்டி, மணல் வெளியே வராமல் முடிச்சுப் போடவும்.

ஸ்டெப் 4: சாக்ஸின் நடுப்பகுதியில் படத்தில் காட்டியபடி டெக்கரேஷன் ரோப் கட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப் 5: மேல் பகுதியில் காதுகள் போன்று நூலால் கட்டவும்.

கண்களை ஒட்டி, மூக்கு, மீசை வைத்து அலங்கரித்தால், சாக்ஸ் பூனை தயார்.

 -சு.சூர்யா கோமதி,  படங்கள்: ப.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு