Published:Updated:

ஸ்கூலுக்கு ரெடியா? - உணவு

ஸ்கூலுக்கு ரெடியா? - உணவு

பிரீமியம் ஸ்டோரி

‘‘இந்த வருஷம் முழுக்க வீட்டிலும் பள்ளியிலும் பின்னி பெடலெடுத்து ‘நம்பர் ஒன்’ எனப் பெயர் வாங்க ரெடியாகிட்டீங்க சந்தோஷம். அதுக்கு எனர்ஜியோடு இருக்கிறது முக்கியமாச்சே’’ என்கிறார், குழந்தைகள் நல இயன்முறை மருத்துவர், ராதா பாலசந்தர். என்னவெல்லாம் சாப்பிடலாம்? என்னவெல்லாம் தவிர்க்கலாம்? உடற்பயிற்சியாக என்னவெல்லாம் செய்யலாம்?

ஸ்கூலுக்கு ரெடியா? - உணவு

• காலை உணவாக இட்லி, இடியாப்பம் என ஆவியில் வேகவைத்தவை.

• அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்.

• இட்லி இல்லாவிட்டால் வாழைப்பழம்,  பால்.

• புரோக்கோலி, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பீன்ஸ், பட்டாணி, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, காலிபிளவர், பீன்ஸ்.

• பள்ளி ஸ்நாக்ஸ் இடைவேளையில்  பழத்துண்டுகள்.

• வீட்டிலேயே தயார்செய்த பழச்சாறு.

• மதிய உணவில் பாதி பங்காகக் காய்கறிகள்.

• பருப்பு வகைகள், கடல் உணவுகள், ட்ரை ப்ரூட்ஸ், முட்டை.

ஸ்கூலுக்கு ரெடியா? - உணவு

• பால், வெண்ணெய்...  சிலருக்குப் பால் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் சிறுதானிய உணவுகளைச் சாப்பிடலாம்.

• பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் வேகவைத்த  வேர்க்கடலை, கொண்டைக்கடலை, காராமணி போன்றவை.

• இரவில் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்க.

• காய்கறிகளில் சூப் தயாரித்துக் குடிப்பது.

• பள்ளியில் நண்பர்களோடு பேசிக்கொண்டே, நிதானமாக ரசித்துச் சாப்பிடுங்கள்.

• காலையில் எழுந்ததும் ஸ்கிப்பிங் அல்லது தோப்புக்கரணம்.

• எதையும் அவசரமாகச் சாப்பிடாதீங்க. மென்று  சாப்பிட்டால்தான் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

• தினமும் அரை மணி நேரமாவது சைக்கிள் ஓட்டுங்க.

செய்யாதீங்க!

ஸ்கூலுக்கு ரெடியா? - உணவு

குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிடுவது.

• அதிகம் குளிர்ந்த உணவுகள்

• இடைவேளையில் பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவது.

• பாக்கெட்டுகளில் அடைத்த ஜூஸ்

• கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, சமோசா...

• டி.வி, செல்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடாதீங்க.

- கிராபியென் ப்ளாக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு