Published:Updated:

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

பிரீமியம் ஸ்டோரி

கோடை விடுமுறை முடிஞ்சுபோச்சு. இனி, ஸ்கூலுக்குப் போகணும். காலையில் ‘எழுந்திரு எழுந்திரு’ என்ற அம்மாவின் அலாரக் குயில் குரலில் ஆரம்பிச்சு, ராத்திரி வரை பரபரப்பு இருக்கும். இப்படி மத்தவங்களையும் டென்ஷனாக்கி, நாமும் டென்ஷனாகி... இதுக்கு ஒரு எண்டு கேம் வேணாமா? அதுக்கு சிம்பிளா சில விஷயங்களைச் சொல்றார், குழந்தைகள் கல்வியாளர் விஜயா.

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

• வீட்டிலும் அம்மா, அப்பாவிடம் 100 மார்க் வாங்கலாம்!

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

காலையில் சரியா கண் விழிக்கணும்னா, ராத்திரி சீக்கிரம் தூங்கணும். அம்மா, அப்பா முழிச்சுட்டு இருக்காங்களேன்னு பார்க்காமல் 9 மணிக்குப் படுக்கைக்குப் போயிடுங்க.

• சீக்கிரமா படுக்க வந்தாச்சுன்னு சொல்லிட்டு, ஸ்மார்ட்போனில் கேம் விளையாடறது, டிவி பார்க்கிறதுன்னு இருக்கக் கூடாது. அதுக்கெல்லாம் முன்னாடியே குட்நைட் சொல்லிடுங்க.

• ராத்திரி சாப்பிட்டு முடிச்சதுமே யூனிஃபார்ம், ஷூ, சாக்ஸ் என எல்லாத்தையும் ரெடியா ஓர் இடத்துல வெச்சுக்கங்க. காலையில அடிச்சுபிடிச்சு தேடவேண்டியதில்லை.

• காலையில் கண் விழிச்சதும் சந்தோஷமா எதையாவது நினைச்சுக்கிட்டு எழுந்திருயுங்கள். கிளாஸ், சப்ஜெக்டு என   நினைச்சுட்டு பதற்றமா எழுந்திருக்க வேண்டாம்.

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

• எல்லாத்துக்கும் அம்மா, அப்பாவை எதிர்பார்க்காதீங்க. குளியலறைக்கு டவல் எடுத்துட்டுப் போறது, சோப் இருக்கான்னு பார்க்கிறதுன்னு நீங்களே செஞ்சுக்கங்க.

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

மாலையில் திரும்பியதும் சீருடையைக் கழற்றி துவைக்கும் இடத்தில் போடுங்க. கொஞ்சம் நேரம் விளையாடிட்டு படிப்பு, வீட்டுப் பாடத்தை ஆரம்பிச்சுடுங்க.

• லன்ச் பேக் எடுத்து வைக்கிறதில் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க. தங்கச்சி, தம்பி இருந்தாங்கன்னா அவங்களுக்கு டிரெஸ் போட்டுவிடறது, பேக் எடுத்துக்கொடுக்கிறதுன்னும் ஹெல்ப் பண்ணுங்க.

• காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடணும். அப்போதான் ஸ்கூலுக்குப் போய் எனர்ஜியோடு படிக்க முடியும், விளையாட முடியும்.

இங்குள்ள செக் லிஸ்ட்டை வெட்டியெடுத்து, ஒட்டி வெச்சுட்டு தினமும் பார்த்துக்கங்க!

ஸ்கூலுக்கு ரெடியா? - வீடு

- வெ.வித்யா காயத்ரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு