“இந்த சைக்கிள் என்னோட நண்பன். நான் செய்யற ஒவ்வொரு சாதனையும் இவனுக்கும் சொந்தம்’’ என்று அன்புடன் சைக்கிளை தடவிக்கொடுக்கிறார் அபினவ்.

கோவை, கேம்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் அபினவ், பாண்டிச்சேரி டு மாமல்லபுரம் வரை இடையில் எங்கும் நிற்காமல் சைக்கிளிங் மூலம் 3 மணி 40 நிமிடங்களில் கடந்து, ‘ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு’ சாதனைகளைப் படைத்துள்ளார்.

“எனக்கு இப்போ ஏழு வயசு. வீடியோ கேம், ரிமோட் கார் என நிறைய இருந்தாலும் எனக்கு எப்பவும் சைக்கிள்தான் ரொம்ப பிடிக்கும். வீட்டிலிருந்த சைக்கிளை எடுத்துட்டு சுத்திட்டே இருப்பேன். என் ஆறாவது பிறந்தநாளுக்காகப் புது சைக்கிள் வாங்க கடைக்குப் போனோம். என் ஆர்வத்தைப் பார்த்த அந்தக் கடை அங்கிள், சைக்கிளிங் கோச் பத்தின ஒரு நம்பரைக் கொடுத்தார். அப்படித்தான் சைக்கிளிங் போக ஆரம்பிச்சேன்’’ என்கிறார் அபினவ்.

அந்த நேரத்தில், கோயம்புத்தூரில் Hubbali bycycle club என்ற சைக்கிளிங் குழு ஒன்று கின்னஸ் சாதனைக்கு முயற்சிப்பதாக அறிந்து, அங்கே பெற்றோருடன் சென்றிருக்கிறார்.

‘‘1235 பேர் ஒரே வரிசையில் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா சைக்கிளிலிருந்து கால்களைக் கீழே வைக்காமலே போகிற சாதனை அது. ‘நீ ரொம்ப சின்னப் பையன். சின்னதா தப்பு நடந்துட்டாலும் எங்க முயற்சியும் வீணாகிடும்’னு என்னை சேர்த்துக்க மறுத்தாங்க. என் அம்மாவும் அப்பாவும் விடலை. இவனால் முடியும்னு சொன்னாங்க. வீட்டுக்கு வந்து, நான் சைக்கிளிங் செஞ்ச வீடியோவை எடுத்து அனுப்பினோம். அப்புறம் சேர்த்துக்கிட்டாங்க. ஜனவரி 2019 ல் நடத்தப்பட்ட அந்தக் குழுவின் கின்னஸ் சாதனையில் நானும் ஒருத்தனா இருந்தேன்” என்று புன்னகைக்கிறார் அபினவ்.

“அடுத்து என்ன செய்யலாம்னு மாஸ்டர்கிட்ட கேட்டேன். நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்யும் சாதனை இருக்குன்னு சொன்னார். அதுக்காக, தினமும் 15 கிலோமீட்டர் சைக்கிளிங் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அடுத்தடுத்து தூரத்தை அதிகமாக்கி, 50 கி.மீ வரை ஓட்டினேன். ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு’ சாதனைக்கு 4 மணி நேரத்தில் 50 கி.மீ தூரத்தையும், ‘ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு’ சாதனைக்கு 4 மணி நேரத்தில் 60 கிமீ தூரத்தையும் கடக்கணும். 2019 மே 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 மணி 40 நிமிஷத்திலேயே 60 கிலோமீட்டரையும் கடந்து, ரெண்டு சாதனைகளையும் செஞ்சுட்டேன்’’ என்கிற அபினவ், தனது அடுத்த இலக்கு, தனிப்பட்ட கின்னஸ் சாதனை என்கிறார்.

‘‘அதுகூட ஒரு ஆரம்பம்தான். சைக்கிளிங்ல இருக்கிற அத்தனை உலக சாதனைகளையும் முறியடிக்கணும்’’ என்கிறார் கெத்தாக.

- சு.சூர்யா கோமதி