இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டைக்குள் இருக்கிறது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு அருங்காட்சியகம். நம் முன்னோர்களின் பெருமைகளை அறிய அங்கே ஒரு விசிட் அடித்தோம்.

‘‘நம் முன்னோர்கள் பற்றி பார்க்கிறதுக்கு முன்னாடி உலகத்தின் முன்னோடி விலங்குகளில் ஒன்றை 3 D காட்சியாகப் பார்க்கலாம் வாங்க’’ என்று புன்னகையுடன் வரவேற்றார் அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர், சரவணன்.

எங்க எல்லோருக்கும் 3 D கண்ணாடியைக் கொடுத்தார். அங்கிருந்த எல்.இ.டி. தொலைக்காட்சி முன்னாடி ஆர்வத்துடன் உட்கார்ந்ததும், திரையில் குட்டி டைனோசர் ஒன்று வந்தது. அது அங்கும் இங்குமாக ஓட ஓட, விதவிதமான பெரிய டைனோசர்கள் கண்களுக்குப் பக்கத்தில் வந்து பயமுறுத்திட்டுப் போச்சு.

‘‘இந்த 3 D குறும்படத்தைப் பார்வையாளர்களுக்காகத் தினமும் காட்சிப்படுத்துகிறோம். இந்த அருங்காட்சியகம் 1985 செப்டம்பர் 6ஆம் தேதி, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டவுன் ஹாலில் தொடங்கப்பட்டது. அப்போது, கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் தொடங்கி வைத்தார். 2000ஆம் ஆண்டு, வேலூர் கோட்டைக்கு மாற்றப்பட்டது. இங்கே சிற்பங்கள் கூடம், நாணயவியல் கூடம், படிமக் கூடம், மானுடவியல் கூடம், இயற்கை அறிவியல் கூடம் என 3,300-க்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கற்கால மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களில் ஆரம்பித்து, ஆரணி ஜாகிர்தார்களின் போர் வாள்கள் வரை உள்ளன. இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரம ராச சிங்கன் வேலூர் கோட்டையில்தான் சிறை வைக்கப்பட்டிருந்தார். அந்த மன்னன் பயன்படுத்திய சதுரங்கப் பலகையும் இங்குள்ளது’’ என்ற சரவணன், ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று காண்பித்தார். அந்தச் சதுரங்க விளையாட்டுக்கு யானையின் தந்தத்தில் செய்த காய்களைப் பயன்படுத்தி இருக்கிறார் மன்னன்.

பல்லவர், சோழர் காலத்து கற்சிலை மற்றும் 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலைகளையும் கண்டோம். அத்துடன், மாய் ஜாடி என்று ஒன்றை காண்பித்தார். அதன் வாய்ப் பகுதியில் நீரை ஊற்றிவிட்டு, ‘‘இப்போ பாருங்க, இதுல இருந்த தண்ணி மாயமாகப் போகுது’’ என்று தலைகீழாக கவிழ்த்தார். ஆச்சர்யம்... தண்ணீரைக் காணவில்லை. பிறகு, மூக்கு போன்று நீண்டிருந்த சிறிய குழாயைக் கவிழ்க்க அதன் வழியே தண்ணீர் வந்தது.

‘‘இது இரு வழி கூஜா. இதன் உள்ளே இரண்டு அடுக்குகளாக இருக்கு. ஒரு சிறு குழாய் வழியாகக் கீழ்ப்பகுதிக்கு தண்ணீர் இறங்கிடும். இப்படி அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் நுட்பமான பல பொருள்களை உருவாக்கி இருக்காங்க. இந்த அருங்காட்சியகத்தில் ஆண்டுதோறும் நவம்பர்-14 குழந்தைகள் தினத்திலும், மே-18 அருங்காட்சியகம் தினத்திலும் குழந்தைகளிடம் கலைப் பண்பாட்டை வளர்க்கும் வகையில் போட்டிகள் நடத்தறோம். இந்த வருஷம் நீங்களும் கலந்துக்கங்க’’ என்றார் அன்புடன்.

‘‘நிச்சயமா வரோம் சார்’’ என்று நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம்.

- சுட்டி டீம், படங்கள்: ச.வெங்கடேசன்