ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நீங்க சினிமா தியேட்டருக்குப் போயிருக்கீங்களா? அது எப்படி இருக்கும்?

‘இது என்ன கேள்வி? பெரிய கட்டடத்திலும், பளபள மால்களிலும் குளுகுளு ஏசியோடு இருக்கும்’னு சொல்வீங்க. ஆனா, இப்போ நாம பார்க்கப்போகிற தியேட்டர் வேற.

வேலூரிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, பூட்டுத்தாக்கு என்ற கிராமம். அங்கே இருக்கு, கணேஷ் திரையரங்கம். சுற்றிலும் மரங்களுக்கு நடுவில் இருந்தது அந்த தியேட்டர்.

திருவிழாக்களில் கொம்பு நட்டு, கூம்பு வடிவில் ‘லவுட் ஸ்பீக்கர்’ கட்டிவெச்சு பாட்டு போடுவாங்களே... அப்படி ஒண்ணுதான் முதலில் கண்ணில் பட்டுச்சு. பெயின்ட் உதிர்ந்த சுவர்கள், தகரத்தில் செய்த கதவுகள் என வித்தியாசமா இருந்துச்சு.

‘‘வாங்க... வாங்க... இதை ‘டென்ட் கொட்டாய்’னு சொல்வாங்க. முதன்முதலில் சினிமா தியேட்டர்கள் இப்படித்தான் இருந்துச்சு. கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி வரைகூட எல்லாக் கிராமங்களிலும் இந்த மாதிரி தியேட்டர்கள் இருந்துச்சு’’ என்றபடி வரவேற்றார் கணேஷ் என்கிற அந்தத் தாத்தா.

‘‘நான்தான் இந்த தியேட்டரின் ஓனர். 35 வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்சது. அப்போ, சுத்தியிருக்கிற பல கிராமங்களிலும் இந்த மாதிரி தியேட்டர்கள் இருந்துச்சு. நல்ல போட்டியோடு சினிமா ஓட்டுவோம். போகப்போக பெரிய தியேட்டர்கள் வர ஆரம்பிச்சதும், டென்ட் கொட்டாய்களை மூடிட்டாங்க. சிலர் இடிச்சு கட்டடமா கட்டிட்டாங்க. நான் மட்டும் விடாப்பிடியா இப்படியே நடத்திட்டிருக்கேன்’’ என்ற கணேஷ் தாத்தா, ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று காண்பித்தார்.

‘‘இதுதான் ஆபரேட்டர் ரூம். இதோ, இதுதான் பழைய புரெஜெக்டர். ஃபிலிம் ரோல் போட்டு படம் ஓட்டும் புரெஜெக்டர். இந்தக் கம்பி வளையத்தில் படத்தின் ஃபிலிமை சுத்தி, இதில் ஓடவிடுவோம். இதை ரீல்னு சொல்வோம். அப்போவெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் மூன்று மணி நேரம் ஓடும். பலமுறை ரீல்களை மாத்தணும். இப்போ இதைச் சும்மாதான் வெச்சிருக்கேன். இப்போதைய க்யூபி முறையில்தான் படம் போடறோம். தியேட்டரின் சூழலைத்தான் பழைய டைப்ல வெச்சிருக்கேனே தவிர, படம் ஓட்டறதுக்கான நவீன சிஸ்டங்கள் இருக்கு. க்யூபி, பெரிய ஸ்க்ரீன் எனப் பெரிய தியேட்டர்களில் இருக்கும் வசதிகள் எல்லாம் இங்கும் இருக்கு’’ என்றார்.

அடுத்து, படம் பார்க்கும் இடத்துக்குச் சென்றோம். இரண்டு பக்கமும் சுவரோ, தடுப்போ இல்லாமல் இருந்தது.

‘‘பொழுது சாய்ஞ்ச பிறகுதான் படம் பார்க்க முடியும். அதனால், மாலையும் இரவும் என இரண்டு காட்சிகள்தான் ஓட்டறோம். மண் தரை, சாதாரண பென்ச், குஷன் சேர் என மூணு வகை இருக்கு. தியேட்டர் ஆரம்பிச்சப்போ மண் தரையில் படம் பார்க்க 50 பைசாதான் டிக்கெட். இப்போ, மண் தரைக்கு 25 ரூபாய், பென்ச் 30 ரூபாய், குஷன் சேர் 35 ரூபாய். ஃபேன் இருக்கு. ஆனாலும், இயற்கைக் காற்றுதான் இங்கே ஏசி. இந்தச் சிலுசிலு காற்றோடு படம் பார்க்கிறதுக்காக சென்னை, காஞ்சிபுரம், சேலத்துல இருந்தும் ஆர்வமா வர்றவங்க இருக்காங்க. மண் தரையிலே படுத்துட்டே நீங்க ஜாலியா படம் பார்க்கலாம்’’ என்று சிரித்தார் கணேஷ் தாத்தா.

-சுட்டி டீம், படங்கள்: ச.வெங்கடேசன்