‘‘எங்க வீட்டுல நான் கடைக்குட்டி. அப்பா இந்தியன் பேங்க்ல வேலை பார்த்தாங்க. அப்போ, சென்னை ஆழ்வார்பேட்டையில் சி.பி ராமசாமி அய்யர் கார்டன்ல தினமும் அப்பாவுடன் வாக்கிங் போவேன். ஒருநாள், ‘அப்பா அந்தப் பக்கம் காடு, இந்தப் பக்கம் வீடு, நடுவுல ரோடு இருக்கு’னு சொன்னேன். வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம், ‘என் மகள் கவிதை எழுதிட்டா’னு சொன்னார். அவரின் நண்பர்களிடமும் பெருமையாகச் சொன்னார். குழந்தைகளை எப்படி ஊக்கப்படுத்தணும் என்பதற்கான உதாரணம் என் அப்பா’’ என்கிறார் தேவி நாச்சியப்பன்.

இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது பெற்றிருக்கும் தேவி நாச்சியப்பனின் அப்பா, குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா. தேவி நாச்சியப்பன் இதுவரை குழந்தைகளுக்காக 12 நூல்கள் எழுதியிருக்கிறார்.

‘‘என் அப்பாவின் படைப்புகளும் அவர் காட்டிய வழிமுறைகளுமே என்னை கவிதைகள், சிறுகதைகள் எழுதத் தூண்டியது. பாடல்கள் எழுதுவதுடன் அவற்றை நடிப்புடன் பாடியும் காண்பிப்பார். சின்ன பிள்ளைகள் என நினைக்காமல் எங்கள் கருத்தைக் கேட்டு, தனது கவிதைகளில் திருத்தம் செய்வார். கவிமணி தேசிக விநாயகம், அப்பாவின் மானசீக குரு. நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, கவிமணி குழந்தைகள் சங்கத்தின் அமைப்பாளராக என்னை நியமித்தார். நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினோம். எங்கள் கவிதைகளை செம்மைப்படுத்தித் தருவார் அப்பா. பட்டிமன்றங்களிலும் பேச ஆரம்பித்தேன். ‘உன் எழுத்து நடைக்கு நீ சிறுகதைகளும் எழுதலாம். முதலில், ஆங்கிலக் கதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து எழுதிப்பார். நடை பழகும்’ என்றார். இப்படி என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அப்பா இருக்கிறார். நான் எழுதிய மொழியாக்கக் கதைகளை தொகுத்து, என் திருமண நாளில் ‘பல தேசத்துக் குட்டிக் கதைகள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது’’ என்கிறார் தேவி நாச்சியப்பன்.

‘‘என் கணவர் நாச்சியப்பன். அவரும் தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுக்கொண்டவர். திருமணத்துக்குப் பிறகு 12 வருடங்கள் ‘கவிமணி குழந்தைகள் சங்கம்’ செயல்படவில்லை. என் மகன் வருண் பிறந்த பிறகு மீண்டும் கவிமணி குழந்தைகள் சங்கத்தைத் தொடர்ந்தோம். குழந்தைகளுக்குப் பட்டிமன்றம், கவிதை, பாடல்கள் எனப் பயிற்சி அளித்தோம். காரைக்குடியில் தமிழ் எழுத்தாளர் சங்கம், புத்தகத் திருவிழா, குழந்தைகளுக்கான போட்டிகள் எனத் தொடர்ந்து நடத்திவருகிறோம். என் மகன் வருணும் சுட்டி விகடனின் சுட்டி ஸ்டார்தான்’’ என்கிற தேவி நாச்சியப்பன், ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

2012 ஆம் ஆண்டின் நல்லாசிரியர் விருது, 2017ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தின் தமிழ் செம்மல் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

‘‘இந்த விருதுகளைவிட, என் மாணவக் குழந்தைகளை எழுதவைத்து, அவர்கள் பரிசுடன் வரும்போது அடையும் மகிழ்ச்சியே அதிகம். உதாரணமாக, என் மாணவர்களில் ஒருவரான ரமேஷ் பாபு, கதைகள் எழுதுவதை அவர் வீட்டில் விரும்பவில்லை. நான் ஊக்கப்படுத்தி எழுதவைத்தேன். ஒரு போட்டியில் ரமேஷ் பாபு எழுதிய கதைக்கு பரிசு கிடைத்து, சென்னையில் விழாவும் நடைபெற்றது. அந்த மாணவர் ரமேஷ் பாபு, இப்போது அழகப்பா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர். இப்படியான மாணவர்களை உருவாக்குவதே எனக்கான பெரிய விருது’’ எனப் புன்னகைக்கிறார் தேவி நாச்சியப்பன்.

- தெ.பாலமுருகன், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்