மீன் நீந்துமா பறக்குமா?

உலகின் மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு சிறுத்தை. ஆனால், அந்தச் சிறுத்தைக்கே சவால்விடும் உயிரினம் ஒன்று உள்ளது. நிலத்தில் அல்ல நீரில். அதுதான், செயில் மீன் ( Sail fish). இந்த செயில் மீன், ஒரு மணி நேரத்துக்கு 109 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். பார்க்கும் நமக்கு நீந்திச் செல்கிறதா பறந்து செல்கிறதா என்ற குழப்பம் ஏற்படும். அவ்வளவு வேகம். இது, சிறுத்தையின் ஓட்டத்துக்கு ஈடானது.

பூவும் பேசும்!

நெதர்லாந்து நாட்டின் வாகெனிகன் பல்கலைக்கழகம் (Wageningen University), கூகுளுடன் இணைந்து, துலிப் பூக்கள் வேர்களுடன் தொடர்புகொள்ளும் முறையை ஆராய்ந்துள்ளனர். தானியங்கி இயந்திரம் ஒன்றின் மூலம் அதன் தொடர்புகளை ஆங்கிலத்தில் தொகுத்து, அதனுடன் உரையாடும் ‘கூகுள் துலிப்’ என்கிற செயலியைத் தயாரித்துள்ளனர். கூடிய விரைவில் மனித மொழிகள் அனைத்திலும் துலிப் பூக்களுடன் தொடர்புகொள்ளலாம் என்கிறது கூகுள் நிறுவனம்.

ஈர்க்கும் சாயம்!

ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதில் உள்ள ஹைட்ரஜனைப் பிரித்து எடுக்கும் சுவர் சாயத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர். ‘‘இந்தச் சாயத்தில், ‘டைட்டானியம் ஆக்சைடு’ துகள்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ‘மாலிப்டீனம் சல்பைடு’ ஆகியவை உள்ளன. இவை, காற்றின் ஈரப்பதத்தில் உள்ள ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் தனித்தனியாகப் பிரிக்கும். இந்த ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்’’ என்கிறார்கள் ஆர்.எம்.ஐ.டி. விஞ்ஞானிகள்.

வெள்ளை சிங்கம்!

உலக அளவில் 300 வெள்ளைச் சிங்கங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஹங்கேரி நாட்டின் ஸேகேட் மிருகக் காட்சி சாலையில் (Szeged Zoo) கடந்த மே மாதம் 1.5 கிலோ மீட்டர் எடையுடைய வெள்ளை பெண் சிங்கம் பிறந்தது. Sonja எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குட்டி, இப்போது பயங்கர டிரெண்டிங்கில் உள்ளது.

டெக்னிக் டாக்டர்!

மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவி இல்லாமலே, முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் காலம் வந்துவிட்டது. பாடியோ (BodyO) எனப்படும் இந்தப் பெட்டியில் 10 நிமிடங்களுள் உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற பலவற்றை நாமே பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாம். பரிசோதனை முடிவுகளை மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். துபாய் போன்ற நாடுகளில் இந்தப் பரிசோதனைப் பெட்டியின் வழியாக உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதாம்.

பாண்டா வாடகைக்கு..! வா!

பார்க்கும்போதே மனதைக் கொள்ளையடிக்கும் விலங்குகளில் ஒன்று, பாண்டா கரடி. சீனாவைச் சேர்ந்த அரிய வகை உயிரினங்களில் ஒன்று. இந்த பாண்டா கரடிகளை சீனாவுக்குள் மட்டுமே விற்று, வாங்க முடியும். வெளிநாட்டுக்கு வாடகைக்கு மட்டுமே எடுக்கலாம். வெளிநாட்டு மிருகக் காட்சிச் சாலைகளுக்கு ஆண்டுக்கு இவ்வளவு எனக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தம் செய்து அளிப்பார்கள். அப்படி அளிக்கப்பட்ட பாண்டா கரடிக்குக் குட்டி பிறந்தால், அதற்கும் வாடகை தர வேண்டும்.

காப்போம் காகபோ!

அழியும் நிலையில் உள்ள உயிரினங்களில் ஒன்று, காகபோ (kakapo) என்ற கிளி வகை. கிளி இனங்களிலேயே பெரியதான காகபோ, பறக்க முடியாத பறவை. இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் நடமாடும். நியூசிலாந்து நாட்டில் பரவலாகக் காணப்பட்ட இந்த இனம், வேட்டையாடுதல் மற்றும் வயலுக்குப் போடும் பூச்சிக்கொல்லிகளின் காரணமாக அரிதாகிவிட்டன. இப்போது, சுமார் 150 மட்டுமே உள்ளன. காட்பிஷ் என்ற தீவில் பிறந்து சுமார் 50 நாள்களேயான காகபோ கிளி ஒன்றைக் கண்டறிந்தனர். அதன் தலையில் துளையும் வீக்கமும் இருந்தன. அந்தக் கிளிக்கு உலகிலேயே முதன்முறையாக, மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளுக்குச் செய்யும் மூளை அறுவை சிகிச்சை வழிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.

ஆந்திராவின் காஷ்மீர்!

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், சிந்தபள்ளி தாலுகாவில், உள்ள கிராமம், லம்பாசிங்கி (Lambasingi). கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை, ‘ஆந்திராவின் காஷ்மீர்’ என அழைக்கின்றனர்.

நவம்பர் முதல் ஜனவரி வரை கிராமமே ஐஸ்கட்டி போர்வையில்தான் இருக்கும். இங்கே விடுதிகளோ, உணவகமோ கிடையாது. மொத்த ஜனத்தொகையே ஆயிரத்துக்குள்தான். டிரிபோடோ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களே, சுற்றுலாப் பயணிகளுக்கு குடிசைகளை ஒதுக்கி உதவுகின்றனர்.