Published:Updated:

பசியால் மண்ணைத் தின்று இறந்த குழந்தைகள்!- ஆந்திராவில் நடந்த துயரம் 

பசியால் மண்ணைத் தின்று இறந்த குழந்தைகள்!- ஆந்திராவில் நடந்த துயரம் 
பசியால் மண்ணைத் தின்று இறந்த குழந்தைகள்!- ஆந்திராவில் நடந்த துயரம் 

ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூரில் பசியால் துடித்த குழந்தை மண்ணைத் தின்றதில் துடிதுடித்து இறந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பசியால் மண்ணைத் தின்று இறந்த குழந்தைகள்!- ஆந்திராவில் நடந்த துயரம் 

ஆனந்தப்பூரில் கடந்த இரு வருடங்களாக மகேஷ்- நீலவேணி தம்பதி வசித்து வந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள், அங்கிருந்து இங்கே வந்து கூலி வேலை செய்துவந்துள்ளனர். ஆனந்தப்பூரில் ஒதுக்குப்புறமான இடத்தில் இவர்கள் குடிசை போட்டு வசித்தனர். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஏழ்மையான நிலையில் உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியின் மகன் சந்தோஷ் உணவு இல்லாமல் பசியின் கொடுமையால் மணலைச் சாப்பிட்டுள்ளார். இதனால் ஆறு வயதான அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான்.

அதன் பிறகு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நீலவேணியின் சகோதரி மகளான வெண்ணிலா என்ற 2 வயது சிறுமியும் அதிக பசி காரணமாக மணலை உணவாக உண்டு வயிற்று வலியால் துடிதுடித்து இறந்துள்ளார். இறந்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாததால் தங்கள் கூடாரத்துக்கு அருகிலேயே புதைத்துள்ளனர். பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஹக்குலா சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. 

பசியால் மண்ணைத் தின்று இறந்த குழந்தைகள்!- ஆந்திராவில் நடந்த துயரம் 

குழந்தைகள் பற்றிய விவரம் தெரிந்தவுடன் கத்ரி பகுதி வருவாய் அதிகாரி அஜய் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளார். அதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன. மகேஷும் நீலவேணியும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். அதனால் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அதிகமாக மது வாங்குவதற்கே பயன்படுத்தியுள்ளனர். மீதியுள்ள பணத்தை வைத்துப் பாதி வயிறு நிறையும் அளவு குழந்தைகளுக்கு உணவு அளித்துள்ளனர். சில தினங்களில் அதுவும் இல்லாமலே குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளனர். 

இந்தக் குடும்பம் கர்நாடகாவில் இருந்து வரும்போது தங்களுடன் ஆறு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளனர். அதில் ஆறுமாதத்துக்கு முன்பு இறந்த சந்தோஷ் என்ற சிறுவன்தான் இந்தத் தம்பதியின் பிள்ளை மற்ற அனைவரும் உறவினரின் குழந்தைகள். பின்னர் அந்தத் தம்பதியிடம் உள்ள நான்கு குழந்தைகளும் மீட்கப்பட்டு அரசு காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தம்பதி இருவரும் மது மீட்பு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு போன்ற எந்த அடையாள அட்டைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Vikatan