Published:Updated:

``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்!'' - நெகிழும் தந்தை

``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்!'' - நெகிழும் தந்தை
``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்!'' - நெகிழும் தந்தை

``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்!'' - நெகிழும் தந்தை

'ஹரிணி பாப்பா!' நிச்சயம் இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி ஹரிணி காணமல்போனதும் காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும், குழந்தைகள் நல அமைப்புகளும் ஒன்றிணைந்து ஹரிணியைத் தேடினார்கள். 100 நாள்களுக்குப் பிறகு ஹரிணி பாப்பாவைக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். ஹரிணி பாப்பாவுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருந்தாள். தற்போது அந்தக் குடும்பம் எப்படி இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ள ஹரிணியின் தந்தை வெங்கடேசனிடம் பேசினோம்.

``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்!'' - நெகிழும் தந்தை

"நாங்க நல்லா இருக்கோம். பலருடைய வேண்டுதலுக்குப் பிறகு, எங்க பாப்பா எங்க கையில் கிடைச்சிருக்கா. எங்ககூடப் பலரும் துணையாக இருந்தாங்க. அவங்க எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்லிக்கிறேன். தனி மனுஷனா என்னால எதையுமே செஞ்சிருக்க முடியாது. எதையுமே எதிர்பார்க்காம என்கூட சப்போர்ட்டா நின்ன அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், காவல்துறையினர்னு எல்லோருக்கும் எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. இப்போ எங்க பொண்ணு எங்ககூட இருக்கா. நாங்களும் சந்தோஷமா இருக்கோம்.

பாப்பா காணாமல்போனப்போ அவளைத் தேடுறதுக்காக நிறைய இடத்துல வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தேன். அந்தப் பணத்தை அடைக்க என்ன வழின்னு தெரியாமதான்மா யோசிச்சிட்டு கிடந்தேன். லதா ரஜினிகாந்த் மேடம் பாப்பா காலேஜ் முடிக்கிற வரைக்கும் அவளுடைய படிப்புச் செலவை நான் பார்த்துக்கிறேன்னு சொல்லியிருந்தாங்க. நாங்கதான் படிக்காம போயிட்டோம். எங்க புள்ளையாச்சும் படிச்சு பெரிய ஆளா வந்தா எங்களுக்குத்தானே பெருமை! 

``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்!'' - நெகிழும் தந்தை

இப்போ பணப் பிரச்னை ரொம்பவே பெருசா இருக்கும்மா. லதா ரஜினிகாந்த் மேடம் எனக்கு உதவி பண்றதா சொல்லியிருக்காங்க. இப்போ அவங்களை மட்டும்தான் நம்பி இருக்கேன். அடுத்த வாரம் எங்க நாடோடி மக்களோட வந்து மேடத்தை சந்திக்கப்போறேன். மேடம் பண்ற உதவியை ஆயுசுக்கும் நாங்க மறக்க மாட்டோம் என்றவரிடம் வழக்கு குறித்துக் கேட்டோம்.

பாப்பாவை தூக்கிட்டுப் போனவங்க பாப்பாவுக்குக் கொலுசு எல்லாம் போட்டிருந்தாங்க. அந்த பொருள்கள் எல்லாத்தையும் கருப்பசாமி கோயில் உண்டியலில் போட்டுட்டோம். எங்க பொண்ணு கிடைச்ச சந்தோஷமே எங்களுக்குப் போதும்மா.. ! கடத்திட்டு போனவங்க தரப்பிலிருந்து கேஸை வாபஸ் வாங்கச் சொல்லிக் கேட்டாங்க. இந்த கேஸ் போடுறதுக்குக்கூடக் காசு என்கிட்ட இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகதான் கேஸ் போட்டாங்க. அவங்கதான் பணமே கொடுத்தாங்க. ஒட்டுமொத்த மக்களும் பரிதவிச்சதை மறந்துட்டு எப்படிங்க கேஸ் வாப்பஸ் வாங்க முடியும்... அதனால்தான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.

``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்!'' - நெகிழும் தந்தை

இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம். எங்க இரண்டாவது பொண்ணு அஷ்வினி பிறந்து நாலு மாசம் ஆகுது. ஹரிணி அவ தங்கச்சி கூட விளையாடிட்டு இருக்கா. கடத்திட்டு போனவங்க முடியெல்லாம் வெட்டி ஹரிணியை வேற மாதிரி ஆக்கியிருந்தாங்க. பாப்பா கிடைச்சதுக்கு அப்புறம் அவ எங்க பாஷையை பேசவே இல்லை. ஆனா, இப்போ ஹரிணியும் சரியாகிட்டா. எங்களோட பாஷை பேச ஆரம்பிச்சிட்டா. இப்போ அவளை ரொம்ப பத்திரமா பார்த்துட்டு இருக்கோம். எந்நேரமும் எங்க சொந்தக்காரங்க கண்ணு எங்கப் புள்ளைங்க மேலதான் இருக்கு. இது மாதிரி அடுத்து எந்தக் குழந்தைகளும் தொலைஞ்சிடக் கூடாதுன்னு கவனமா இருக்கோம்மா!" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு