Published:Updated:

பாதுகாப்பு அம்சங்கள்: தனியார் பள்ளி வாகனங்களில் தொடரும் ஆய்வு!

விகடன் விமர்சனக்குழு
பாதுகாப்பு அம்சங்கள்: தனியார் பள்ளி வாகனங்களில் தொடரும் ஆய்வு!
பாதுகாப்பு அம்சங்கள்: தனியார் பள்ளி வாகனங்களில் தொடரும் ஆய்வு!
பாதுகாப்பு அம்சங்கள்: தனியார் பள்ளி வாகனங்களில் தொடரும் ஆய்வு!

சென்னை: தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தாம்பரத்தை சேர்ந்த தனியார் பள்ளியைச் சேர்ந்த சிறுமி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து, பாதுகாப்பு அம்சங்களைப் பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்பதை போக்குவரத்து துறை உறுதிபடுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில்,  தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில், கடந்த 8 ம் தேதி முதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சென்னை அண்ணாநகர் ஆர்.டி.ஓ எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கொளத்தூரில் நடைபெற்று வரும் இந்த ஆய்வில், 45 பள்ளிகளைச் சேர்ந்த 102 பள்ளிப் பேருந்து மற்றும் வேன்கள் இடம்பெற்றுள்ளன. சென்னை மாவட்ட துணை ஆட்சியர் கனகவள்ளியின் மேற்பார்வையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

அவசர வழி கதவு, முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட 20 பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே, வாகனத்தை இயக்குவதற்கான அனுமதிச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆய்வின்போது, குறைகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை நிவர்த்தி செய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.