Published:Updated:

கண்கள் கசிகின்றன! - வாசகியை நெகிழ்த்திய 2கே கிட்ஸ் கட்டுரை

2கே கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
2கே கிட்ஸ்

2K kids

கண்கள் கசிகின்றன! - வாசகியை நெகிழ்த்திய 2கே கிட்ஸ் கட்டுரை

2K kids

Published:Updated:
2கே கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
2கே கிட்ஸ்

2021 ஜனவரி 5 தேதியிட்ட அவள் விகடன் இதழின் ‘2கே கிட்ஸ்’ பகுதியில், ‘பாலியல் வன்கொடுமை சம்பவங்களைச் செய்திகளாக நாம் அடிக்கடி படிக்கிறோம். ஆனால், அதற்குப் பின் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்னவாகும் என்பது பற்றி யோசித் திருக்கிறோமா?’ என்ற பார்வையில், புதுக் கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி குழந்தைக்குத் தாயான மாற்றுத் திறனாளி சிறுமி மற்றும் அவர் குடும்பத்தின் நிலை பற்றி பதிவு செய்திருந்தோம். அதற்கான வாசகியின் கடிதம் இங்கே...

‘’பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறப்புக்குழந்தையின் குடும்பம் குறித்துப் படித்ததும் மனம் கனக்கிறது. மாணவி மு.சௌமியா அந்தக் கட்டுரையை எழுதி யிருக்கிறார். குழந்தையை வன்கொடுமை செய்யும் இரும்பு மனதுக்கு சிறைத் தண்டனையெல்லாம் ஒரு தண்டனையா?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், 5 வயது மனவளர்ச்சியுடன் 50 வயதுக் குழந்தை ஒருத்தி இருக்கிறாள். எந்நேரமும் சப்பிக்கொண்டே இருப்பதால் கசகசக்கும் விரல்கள், எச்சில் வழியும் வாய். அவள் விரல்களைப் பிடித்தால் நம் விரலையும் இறுகப் பற்றி, நட்புடன் சப்பி, அன்பை வெளிப்படுத்துவாள். வார்த்தைகள்கூட இல்லை... ‘ஆ... ஊ...’ சத்தங்கள்தான் அவள் மொழி.

அவள் பிறந்த நாளிலிருந்து அவளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த அவளின் அம்மா மட்டுமே அவள் துணை. ‘சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்கூல்ல இவளை சேர்க்கலாமே’ என்று ஒருநாள் அந்த அம்மாவிடம் கேட்டேன். ‘அங்கெல்லாம் சேர்த்துப் பார்த்துட்டேன்... பாதுகாப்பு குறைவும்மா. நானே பார்த்துக்குவேன்’ என்றார்.

இந்த 50 வருடங்களாகத் தன் குழந்தைக்கு சாதம் ஊட்டி, இயற்கை அழைப்புகளுக்குப் பின் சுத்தமாக்கி, மாதவிடாய் காலங்களில் பேணி என... அந்த 70 வயது அம்மா வாழ்ந்த வாழ்க்கை இதுதான். நெஞ்சம் கனக்கிறது. வசதியான குடும்பம்தான் என்றாலும், தனக்கென எந்த சந்தோஷமும் கேளிக்கைகளும் வேண்டாம் எனத் துறந்து, தன் குழந்தைக்காகவே தவ வாழ்க்கை வாழும் அம்மா அவர்.

மு.சௌமியாவின் கட்டுரையில், சிறப்புக் குழந்தையே தாயாக்கப்பட்டு, அக்குடும்பத்தில் வந்து சேர்ந்திருக்கும் இன்னொரு குழந்தையுடன் அவர்கள் படும் பாடுகளை எண்ணும்போது, கண்கள் கசிகின்றன.

- ஸ்ரீமல்லிகா குரு, சென்னை-33