தமிழ் இனத்தின் பாரம்பர்ய கலைகளில் ஒன்று, பரதநாட்டியம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தோன்றிய இக்கலை, சதிராட்டம், ஆடல், நாட்டியம் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. பின்னர் இது ‘பரதநாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படை, சதிராட்ட வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை என்பதையும் தாண்டி, பரதநாட்டியத்தால் கிடைக்கப் பெறும் அழகு, ஆரோக்கியம் மற்றும் வாழ்வியல் பலன்களை விளக்குகிறார், கோவை, ராம நாதபுரம் ‘மயூரம்’ இசை மற்றும் நடனப் பள்ளியின் பரத ஆசிரியை துர்காலட்சுமி. 19 வருடங்களாக இந்தத் துறையில் இயங்கிக் கொண்டிருப்பவரின் வார்த்தைகள் இங்கே...

சரியாகச் செய்யும்போது பரத நாட்டியமும் ஒரு யோகாதான். இதைப் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். அசைவுகள் (Steps), அதன் பெயர்கள், ஜதி என அனைத்தையும் நினைவு கொள்ளும் செயல்முறையில் மூளைத்திறன் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் தன்னம் பிக்கையுடன் இறங்கும் தைரியத்தை பரதம் கொடுக்கும்.

பரதம் பயில்பவர்களுக்கு நேர்த்தி என்பது இயல்பாகவே வளரத் தொடங்கிவிடும். குறிப்பிட்ட கவுன்டிங்கில் ஆடும் நடனத்தைப் போலவே, எந்தச் செயலையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்கும்படி அவர்களின் மனநிலை அமைந்து விடும்.

பரதம் கற்றுக்கொள்ளும் ஆண்களும் பெண் களும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பரதம் மட்டுமன்றி எந்தவொரு நடனத்தின் வேக மான அசைவுகளின்போதும் உடல் முழுக்கத் தூண்டப்படும் ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத் துக்குக் கைகொடுக்கும்.

பரதநாட்டியத்தின் பல்வேறு நடன அசைவுகள், உடலை சமநிலையில் (Balance) வைத்துக் கொள்ளப் பழக்கும். கைகள், கால்கள், உடல், கண்கள் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து இயங்கும்போது ஸ்டமினா (Stamina) அதிகரிக்கும்.

பரதம் கற்றுக்கொள்பவர்கள் நீடித்த இளமையுடன் இருப்பார்கள். அழகுணர்ச்சி அதிகரிக்கும். அதிக எடை குறைவது, சீரான எடை மெயின் டெயின் ஆவது என உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும்.

கண் அசைவுகள் கண்களுக்கான பயிற்சியாகவும், புருவம், கழுத்து, உதடுகள் என நடனத்தின் பாவனைகளில் அனைத்தையும் பயன்படுத்துவது முகத்துக்கான பயிற்சியாகவும் அமையும்.

பரதம் கற்றுக்கொள்ள வயது ஒரு தடை இல்லை. 40 வயதில்கூட கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம். மன அமைதி, சந்தோஷம், ஆத்ம திருப்தி கிடைக்கும். மனம் விரும்பும்வரை, உடல் அனுமதிக்கும் வயதுவரை ஆடலாம்.

சிறு வயதிலிருந்தே பரதம் கற்று வரும் பெண்களுக்கு அந்தப் பயிற்சியின் காரணமாக எலும்புகள், தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

ஏற்கெனவே பரதம் கற்று வருபவர்கள், கர்ப்பகாலத்திலும் சிறு சிறு அசைவுகளாக நடனம் ஆடலாம். யோகாவைப்போல, இதுவும் பிரசவத்துக்கான ஒரு பயிற்சியாக அமையும்.