கல்லூரி மாணவிகளின் ‘லவ்வபிள் ஹீரோ’, மாணவர்களின் ‘லவ்லி ஹீரோயின்’ யார்... ஒரு க்விக் சர்வே எடுத்தோம், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்.

‘`இதுதாங்க வாழ்க்கையில நான் போடுற முதல் ஓட்டு’’ என்று பரவசமானார் நிதிஷ். ‘`ஒண்ணு தெரியுமா... இன்றைய ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸுக்குப் பிடிச்சவங்கதான் நாளைய சூப்பர் ஸ்டார், கரன்ட் காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்குப் பிடிச்சவங்கதான் நாளைய முதல்வர் வேட்பாளர்’’ என்று கண்ணடித்தபடி சர்வேயில் டிக் போட்டார் சாமுவேல் ஆசீர்வாதம். ‘‘பொதுவா, இங்க அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை பிடிச்ச ஹீரோயின்ஸ் லிஸ்ட்தான் மாறிட்டே இருக்கும். பிடிச்ச ஹீரோ ஆர்டர் அப்படியேதான் இருக்கும். அதையும் தாண்டி 10, 15 வருஷமா ஃபீல்டுல நிக்கிற ஹீரோயின்ஸ்லாம் கெத்துல’’ என்று தம்ப்ஸ் அப்பினார் கவிதா. ‘‘ஹீரோ, ஹீரோயினுக்காக ஓடுற படங்கள்னு இல்லாம, இப்போ கதை, மேக்கிங்னு கிரியேட்டிவ் விஷயங்களையும் மக்கள் அதிகமா கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஸ்டார்ஸ் அதை மனசுல வெச்சு ஸ்கிரிப்ட்டைத் தேர்ந்தெடுக்கணும் என்பதை, காசு கொடுத்து டிக்கெட் வாங்குற உரிமையில சொல்லிக்கிறேன்’’ என்றார் பூர்ணா. இனி ரிசல்ட்ஸ்!

மோஸ்ட் ஃபேவரைட் ஹீரோ... விஜய்!

‘அவரைப் பார்த்தாலே அண்ணன்போல தோணும். அவரோட வெற்றி எங்களோட வெற்றினு தோணும்’, ‘அந்த டான்ஸ் அண்டு கிரேஸ்... சான்ஸே இல்ல’ என்று நடிகர் விஜய்க்கு அன்பை கொட்டினார்கள் ஃபேன் கேர்ள்ஸ். லிஸ்ட்டில் தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், சூர்யா இவர்களுடன் சிவகார்த்திகேயனும் இடம்பிடிக்க, ஹரிஷ் கல்யாண் பெயரையும் இணைக்கிறார்கள் சில கேர்ள்ஸ்.

மோஸ்ட் ஃபேவரைட் ஹீரோயின்... நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டாருக்கு காலேஜ் கைஸ் ஹார்ட்டுல கிடக்குது பெரிய சிம்மாசனம். ‘தலைவி கெத்துமா’, ‘பிரைவேட் ஜெட்ல போற மாஸ்லாம்... சான்ஸே இல்ல’ என்றெல்லாம், அழகு என்பதையும் தாண்டி, ஓர் ஆளுமையாக அவரை ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பிடித்த நடிகை லிஸ்டில் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, ஷாலினி பாண்டே எனத் தொடர்கின்றன பெயர்கள்.

ஹேப்பி `ஆல் தியேட்டர் ஆல் சீட்ஸ்' ரீஓப்பனிங் கைஸ்!