Published:Updated:

2K kids: பூரிக்கு ரசம்... ஒரு Foodie-ன் வாக்குமூலம்!

பூரிக்கு ரசம்
பிரீமியம் ஸ்டோரி
பூரிக்கு ரசம்

- கெளஷிகா.நா

2K kids: பூரிக்கு ரசம்... ஒரு Foodie-ன் வாக்குமூலம்!

- கெளஷிகா.நா

Published:Updated:
பூரிக்கு ரசம்
பிரீமியம் ஸ்டோரி
பூரிக்கு ரசம்

சோத்து மூட்டைனு போன தலைமுறைகள்ல அழைக்கப் பட்டவங்களுக்கு இப்போ கிடைச்சிருக்கிற க்யூட் பேரு... ஃபுடி (Foodie). நானும் ஒரு ஃபுடி தான் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொண்டு..!

நீங்களும்தான் சாப்பிடுறீங்க, நாங்களும் தான் சாப்பிடுறோம்... உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? அது என்னன்னா, வெந்ததைத் தின்னு வயித்தை நிரப்பினா போதும்னு சாப்பிடுறவங்க நீங்க. தாளிச்ச கடுகுல இருந்து சாப்பாட்டோட வாசனை வரைக்கும் ஒவ்வொண்ணையும் ருசிச்சு, ரசிச்சு சாப்பிடுறவங்க நாங்க. எங்க பெருமை இன்னும் நிறைய... படிங்க!

சோறு கண்ட இடம் மட்டுமல்ல, ஊறுகாய் கண்ட இடம்கூட எங்களுக்கு சொர்க்கம்தான். உங்களுக்கு எல்லாம் ஆகவே ஆகாத உப்புமாவைக்கூட, ‘வாவ்... வாட் எ டேஸ்ட்’னு காலி பண்ணிடுவோம். இந்த டயட், ஃபிட்னஸ்லாம் கிலோ என்ன விலைனு எங்களுக்குத் தெரியாது. நல்லா, ஃபுல்லா சாப்புடணும் அவ்ளோதான்.

எல்லா சாப்பாடும் பிடிக்கும்னாலும், அசைவம்னா வயிறு சில இன்ச்கள் எக்ஸ்ட்ரா வளர்ந்திடும் எங்களுக்கு. எங்களுக்கு எதிரி... வேற என்ன... புரட்டாசி மாசம்தான். அந்த மாசம் முடியுறதுக்குள்ள நாங்க படுற பாடு இருக்கே... அதெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாத வாதை.

2K kids: பூரிக்கு ரசம்... ஒரு Foodie-ன் வாக்குமூலம்!

‘கூச்சப்படாம சாப்பிடுங்க’னு உபசரிக்கிற நீங்கயெல்லாம் பெரிய மனுஷங்க. ‘கூச்சப்படாம போடுங்க’னு கேட்குற நாங்கயெல்லாம் ரொம்ப பெரிய மனுஷங்க. நாங்க எல்லாம் ஹோட்டலுக்குப் போனா அந்த ஓனரை பணக்காரர் ஆக்குற வெறியோட ஆர்டர் பண்ணு வோம். கையில காசு இல்லாத நேரம்னா, ரோட்டோர வடை கடை அக்கா கிட்ட சரண்டர் ஆகிடுவோம்.

பிரியாணி - தால்ச்சா, சாம்பார் - உருளைக்கிழங்கு, சப்பாத்தி - குருமானு இந்த ரெகுலர் உணவு காம்பினேஷன்களை எல்லாம் உடைச்சு, புதுசு புதுசா காம்பினேஷன்களை உருவாக்கிச் சாப்பிடுற எங்களோட ஆர்வத்துக்கு இந்த உலகம் விருது கொடுக்கக் கடமைப்பட்டிருக்கு.

உதாரணமா, நான் பூரியில ரசத்தை ஊத்தி சாப்பிடுவேன். அப்பளத்துல தயிர் வெங்காயம் வெச்சு டேஸ்ட் பண்ணுவேன். மீன் வறுவலுக்கு சட்னி தொட்டுக்குவேன். கேட்கும்போதே உங்களுக்கு ‘அய்யய்ய’னு தோணுதுல? இதுதான் உங்களோட சாதாரண நாக்குக்கும், எங்களோட அறுசுவை நாக்குக்கும் உள்ள வித்தியாசம்.

வயிறு ஃபுல்லா சாப்பிட்டாலும், பிடிச்ச அயிட்டத்தைப் பார்த்தா மறுபடியும் பசிக்கிற மாதிரி எங்க வயிற்றை டிசைன் செய்திருக்கிற அந்தக் கடவுளுக்கு நன்றி. ஒரு முக்கியமான வாக்கு மூலம் தரணும். எங்களுக்கு சமைக்கத் தெரியாது, சாப்பிட மட்டும்தான் தெரியும். ஆனாலும், தட்டுல எந்த சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் அதுல உப்பு, காரம், பதம்னு எல்லாத்

தையும் துல்லியமா ஸ்கேன் பண்ணிச் சொல்லிடுவோம். திறமைதானே?!

யார் யார் வீட்டுல என்னென்ன சாப்பாடு நல்லாருக்கும், எந்தெந்தத் தெருவுல என்னென்ன அயிட்டம் கிடைக்கும், ஒவ்வோர் ஊருலயும் என்ன உணவு ஸ்பெஷல்னு கான்ட் டினென்ட்டல் முதல் ஸ்ட்ரீட் ஃபுட் வரைக்கும் தகவல்கள் திரட்டி வெச்சிருப்போம். எங்களோட இதயமே ‘சோறு சோறு’னுதான் அடிக்கும். எல்லாருக்கும் கனவுல க்ரஷ், லவ்வர், நடிகர், நடிகைனுலாம் வருவாங்க. எங்க கனவுல பிரியாணி, சில்லி சிக்கன்தான் வரும்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ஃபுடீஸ் எல்லாரும் வஞ்சிரம்... ஸாரி... வஞ்சகம் இல்லாத நல்ல மனசுக்காரங்களா இருப்பாங்களாம். யாரு சொன்னா?! நாங்களேதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism