Published:Updated:

தமிழகத்தில் பரவலாக மழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Vikatan Correspondent
தமிழகத்தில் பரவலாக மழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் பரவலாக மழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் பரவலாக மழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கி உள்ளது. தொடக்கம் முதல் 10 நாட்களுக்கு மேல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக ஏரிகள், குளங்கள், அணைகள் ஆகியவற்றில் நீர்மட்டம் மளமள என்று உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திடீரென, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவியது. ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்தது. இந்நிலையில், அந்தமான் அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மீண்டும் நேற்று இரவு முதல் பெய்து வருகிறது. அடையாறு, வேளச்சேரி, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, திருவெற்றியூர், எண்ணூர், மணலி சுற்று வட்டாரங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக்நகர், அண்ணாசாலை, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், தாம்பரம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.