Published:Updated:

அப்துல்கலாம் மறைவு: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல்கலாம் மறைவு: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
அப்துல்கலாம் மறைவு: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அப்துல்கலாம் மறைவு: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அப்துல்கலாம் மறைவு: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு அவரது உயிர் பிரிந்தது.

அப்துல்கலாமின் மறைவு, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களிடம் மிகுந்த பாசம் கொண்ட கலாம் மறைவு, மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

புதுச்சேரி...

இதேபோல், இந்திய மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள அப்துல்கலாமின் மறைவையடுத்து, புதுச்சேரி முழுவதும் பள்ளி, கல்லூரி என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்...

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவரான மறைந்த அப்துல்கலாம், அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். அவர் முன்னாள் மாணவர் என்பதன் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஆனால் மாணவர்கள் மட்டும் வகுப்புக்கு வரமாட்டார்கள். நிர்வாக ரீதியில் உள்ளவர்களுக்கு விடுமுறை கிடையாது. மேலும், வழக்கம்போல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு