Published:Updated:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள்: அரசுக்கு நோட்டீஸ்!

Vikatan Correspondent
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள்: அரசுக்கு நோட்டீஸ்!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள்: அரசுக்கு நோட்டீஸ்!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள்: அரசுக்கு நோட்டீஸ்!

மதுரை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக் கோரிய  வழக்கில்,  தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த அதிசய குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சிறப்புச் சட்டம் பற்றி போலீசாருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால்,  சாதாரண சட்டப் பிரிவுகளில் வழக்குகளைப்  பதிவு செய்வதாகவும்   எனவே, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து அரசு வழக்கறிஞர்களை நியமிக்க, உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி, தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்  கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.