Published:Updated:

எஸ்.ஆர்.எம்.நைட்டிங்கேல் பள்ளி முதல்வர்,மேலாளர் கைது!

எஸ்.ஆர்.எம்.நைட்டிங்கேல் பள்ளி முதல்வர்,மேலாளர் கைது!
எஸ்.ஆர்.எம்.நைட்டிங்கேல் பள்ளி முதல்வர்,மேலாளர் கைது!

எஸ்.ஆர்.எம்.நைட்டிங்கேல் பள்ளி முதல்வர்,மேலாளர் கைது!

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கில் அப்பள்ளியின் முதல்வர் மற்றும் மேலாளரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் உள்ள எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மேல்நிலைப் பள்ளியில், இளங்கோ- சிலம்பரசி தம்பதியின் 9 வயது மகள் லோகமித்ரா 4ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7ம் தேதி  பிற்பகலில் பள்ளியின் 4ம்  மாடியில் இருந்து சிறுமி லோகமித்ரா கீழே விழுந்துவிட்டார் என்று கூறி, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனிக்காமல் லோகமித்ரா இறந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் இறப்பில் மர்மம் உள்ளதென்றும் பள்ளி நிர்வாகம் பொய்யான காரணத்தைக் கூறுகிறது என்றும் ஊடகங்களில் பேட்டியளித்திருந்தனர். பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சிறுமி லோகமித்ரா மரணம்,கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் மாணவி லோகமித்ரா பள்ளி மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறி வந்துள்ளது என்றும் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில்,வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த அசோக் நகர் போலீசார் இன்று(வியாழன்) எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் பள்ளியின் முதல்வர் அமல்ராஜையும்,மேலாளர் பார்த்திபனையும் கைதுசெய்துள்ளனர். அவர்களை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த கொண்டுசென்றுள்ளனர்.   

சி.தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு