Published:Updated:

நகைக்காக 3 வயது சிறுமியைக் கொன்ற பக்கத்து வீட்டுப் பெண் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நகைக்காக 3 வயது சிறுமியைக் கொன்ற பக்கத்து வீட்டுப் பெண் கைது!
நகைக்காக 3 வயது சிறுமியைக் கொன்ற பக்கத்து வீட்டுப் பெண் கைது!

நகைக்காக 3 வயது சிறுமியைக் கொன்ற பக்கத்து வீட்டுப் பெண் கைது!

நகைக்காக 3 வயது சிறுமியைக் கொன்ற பக்கத்து வீட்டுப் பெண் கைது!

சென்னை, எண்ணூர் மீனவக் குடியிருப்பைச் சேர்ந்த ரித்திகா என்ற 3 வயது சிறுமி, சனிக்கிழமையன்று காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்நிலையில், நேற்று திருவொற்றியூர் மணலி சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் இருந்து ரித்திகாவின் உடலை காவல்துறையினர் மீட்டனர். சிறுமி மீட்கப்பட்டபோது, வாயில், துணி திணிக்கப்பட்டு, துணியால் கட்டப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரித்திகாவின் உறவினர்கள், குற்றவாளியை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தி, மணலி விரைவுச் சாலைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்துசென்றனர். சிறுமியின் சடலத்தில், அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் இல்லாததால், நகைக்காக சிறுமி கடத்திக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இன்று காலை, சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் ரேவதி என்ற பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ரேவதியிடம் இருந்து ரித்திகாவின் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நகைக்காக குழந்தையைக் கொன்றதாக ரேவதி கூறினார். 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு