Published:Updated:

கேரளாவில் இறந்த தமிழர் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

கேரளாவில் இறந்த தமிழர் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
கேரளாவில் இறந்த தமிழர் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

கேரளாவில் இறந்த தமிழர் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

கேரளாவில் இறந்த முருகனின் குழந்தைகளின் கல்விச் செலவை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம்  சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த முருகன், கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள  கவட்டியம் என்கிற இடத்தில் தங்கி கட்டட வேலை செய்துவந்தார். கடந்த 6-ம் தேதி  இரவு 11 மணியளவில், முருகனும் அவரது நண்பர் முத்துவும் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது, சாத்தனூர் அருகே சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. அதில், பைக் ஓட்டிய முத்துவுக்கு லேசான காயமும் பின்னால் இருந்த  முருகனுக்கு  தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. சாத்தனூர் போலீஸார் இருவரையும்  மீட்டு கொல்லம் கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அங்கு முத்துவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். முருகனுக்கு முதலுதவி செய்துவிட்டு, அங்கிருந்து லைவ் சேவ் எமெர்ஜென்ஸி ஆம்புலன்ஸ் சர்வீஸ் மூலம் மெடிட்ரினா மருத்துவமனைங்கு கிம்ஸ் டாக்டர்ஸ் அனுப்பிவைத்தனர்.  ஆறு மருத்துவமனைகளுக்குச் சென்றும் முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட வில்லை. அதனால் அவர் இறந்துவிட்டார்.

Photo Courtesy: Mathrubhumi

'தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியான முருகனுக்கு மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்தது, சட்டத்தை மீறிய செயல். எனவே, தவறுசெய்த தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க கேரள டி.ஜி.பி லோக்நாத் பெக்ரா, ஐ.ஜி மனோஜ் ஆப்ரகாம், கொல்லம் போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். முருகனுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்ட மருத்துவமனைகள் மீது மாநில மனித உரிமை ஆணையமும் வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் முருகனின் குடும்பத்திடம், மருத்துவமனைகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு,  ''இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடக்காது. இது ஒட்டுமொத்த கேரளாவுக்கும் அவமானம்'' என்று தெரிவித்திருந்தார். கேரள சட்டசபையில் பினராயி விஜயன் முருகனின் இறப்புச் சம்பவம்குறித்து மன்னிப்பு கேட்டார். முருகனின் குடும்பத்துக்கு உதவிகள் செய்யப்படும் என அறிவித்தி ருந்தார். இந்த நிலையில், கொல்லம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு முருகனின் மனைவியும் 2 குழந்தைகளும் வரவழைக்கப்பட்டனர். அப்போது அவர்களிடம், கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகனின் குழந்தைகளின் படிப்புச் செலவை கட்சி ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்தனர். மேலும் அரசு சார்பில் அளிக்கப்படும் உதவிகளை முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி, 2 நாள்களில்  முறைப்படி தெரிவிப்பதாகக் கூறி அனுப்பிவைத்தனர். இறந்த முருகனின் மனைவி முருகம்மாளின் அழுகை, கம்யூனிஸ்ட் தோழர்களைக் கலங்கவைத்துவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு