Published:Updated:

கோரக்பூரில் இறந்த குழந்தைகளுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 72 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

”உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் நிர்வாக சீர்கேட்டினாலும் பொறுப்பற்றத் தன்மையாலும்தான் 72 அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்தன” என்ற முழக்கத்தோடு புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது இறந்த குழந்தைகளுக்கு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். மேலும், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவின் தலைவர்களும் கலந்துகொண்டனர். விடுமுறை நாள் என்பதால் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் கண்ணீரோடு கைகளில் மெழுகுவத்தியை ஏத்தி அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு