Published:Updated:

2K kids : தூத்துக்குடி ஃபுட் ஸ்ட்ரீட்... ஒரு ரவுண்ட் அப்!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids

தூடி ஃபுட் ஸ்ட்ரீட்’க்கு நாங்க போயிட்டு வந்துட்டோம். அப்போ நீங்க?!

2K kids : தூத்துக்குடி ஃபுட் ஸ்ட்ரீட்... ஒரு ரவுண்ட் அப்!

தூடி ஃபுட் ஸ்ட்ரீட்’க்கு நாங்க போயிட்டு வந்துட்டோம். அப்போ நீங்க?!

Published:Updated:
2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids
ம்ம தூத்துக்குடியில புது பஸ் ஸ்டாண்ட் பாலத்துக்குப் பக்கத்துல இப்போ புத்தம் புதுசா ‘தூடி ஃபுட் ஸ்ட்ரீட்' (Tudy Food Steet) ஆரம்பிச்சிருக்காங்க. பொதுவா, சென்னை, கோயம்புத்தூர் மாதிரி பெரிய சிட்டிகள்ல அமைக்கப்படுற இந்த ஃபுட் ஸ்ட்ரீட், இப்போ நம்ம ஊருக்கும் வந்துடுச்சு... வாங்க, ஒரு ரவுண்ட் வருவோம்!
தனுஸ்ரீ
தனுஸ்ரீ

பல வகையான உணவுகள் ஒரே எடத்துல கிடைக்கும், நமக்குப் பிடிச்சதை வாங்கிட்டு, பிடிச்ச இடத்துல உட்கார்ந்து சாப்பிடலாம்ங் கிற ஃபுட் ஸ்ட்ரீட் இலக்கணப்படி, சும்மா கலகலனு இருந்தது கடைத் தெரு. ஒவ்வொரு கடையில இருந்தும் வெவ்வேறுவிதமான உணவுகளின் வாசனை, மூக்கோடு சேர்த்து ஆளையும் தூக்க, இங்க போறதா, அங்க வாங்குறதானு மனசுக்குள்ள ஒரே போட்டா போட்டி. எம்.பி.ஏ பட்டதாரியும் தொழிலபதிபரின் மகளுமான ஜி.வி.தனுஸ்ரீ, “தூத்துக்குடி மக்கள் புதுசா எதையாவது எக்ஸ்பீரியன்ஸ் பண்ணணும்னு அப்பாவோட சேர்ந்து இதை ஆரம்பிச்சேன்” என்கிறார்.

2K kids : தூத்துக்குடி ஃபுட் ஸ்ட்ரீட்... ஒரு ரவுண்ட் அப்!

‘‘இங்க மொத்தம் 14 கடைங்க இருக்கு. பகலை விட ராத்திரியில கூட்டம் செமயா இருக்கு. வண்டி டயர்ல பெயின்ட் பண்ணி வித்தியாசமா ரெடி பண்ணியிருந்த சேர், நைட்டுல கண்ணைக்கவரும் வண்ண விளக்குகள்னு இங்க ரவுண்ட் வர்ற அனுபவமே ஜாலியா இருக்கு. பொதுவா குடும்பத்தோட நாம சாப்பிட ரெஸ்ட்டாரன்டுக்குப் போனா, ஒரு டேபிள்ல உக்கார்ந்து, அங்க இருக்கிற சாப்பாட்டை மட்டும்தான் சாப்பிட்டு வர முடியும். ஆனா இந்த ஃபுட் ஸ்ட்ரீட்ல வெட்டவெளியிலயும், இரவு நேரத்துல நிலாவை ரசிச்சிட்டேவும், பல கடை உணவுகளை ஒரே இடத்துல சேர்த்து சுவைக்க முடியுது’’ - குஷியா ஃபுட் ஸ்ட்ரீட்ல நடமாடிக்கிட்டிருக்காங்க தூத்துக்குடி மக்கள்.

2K kids : தூத்துக்குடி ஃபுட் ஸ்ட்ரீட்... ஒரு ரவுண்ட் அப்!

இளைஞர்கள் ஃபோட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடும்விதமா, ‘ஐ அம் ஃபுடீ’னு ஒரு ஃபோட்டோ பூத் வெச்சிருக்காங்க. ‘இளைஞர்கள் மட்டும்தான் ஸ்டேட்டஸ் போடுவாங்களா?’னு பெரியவங்கள்ல இருந்து குழந்தைங்க வரை அங்கே செல்ஃபிகளை சுட்டுத்தள்ளுறாங்க.

‘தூடி ஃபுட் ஸ்ட்ரீட்’ல கடை வெச்சிருக்குற புகழ், ‘‘பொதுவா ஹோட்டலுக்குப் போற உற்சாகத்தைவிட டபுள் மடங்கு உற்சாகத்தோட இங்க எல்லாரும் வர்றாங்க’’னு சொன்னார் மகிழ்ச்சியுடன்.

2K kids : தூத்துக்குடி ஃபுட் ஸ்ட்ரீட்... ஒரு ரவுண்ட் அப்!

இங்க ஷவர்மா கடை போட்டிருக்கிற ஃபெலிக்ஸ், ‘‘நான் முதல்ல வீட்லயிருந்துதான் ஷவர்மா வித்துட்டு இருந்தேன். இப்போ இங்க கடை போட்ட தும் வியாபாரம் ஓஹோதான். ஷவர்மா, பர்கர், கிரில் சிக்கன், ட்ரிங்ஸ், லஸ்ஸி, மில்க் ஷேக்னு விக்கிறேன், இளைஞர்கள் அதிகமா வர்றாங்க. ஒரு நாளைக்கு 8,000 ரூபாய் வரை விற்பனை ஆகுதுனா பார்த்துக்கோங்க’’ என்கிறார்.

‘தூடி ஃபுட் ஸ்ட்ரீட்’-ல ரவுண்ட்ஸ் வந்துட்டிருந்த தேவி, ‘‘இன்னிக்குதான் முதல் தடவை வர்றேன். இந்த அமைப்பு எல்லாம் பார்க்கவே நல்லாயிருக்கு. உணவு அயிட்டங்களும் ருசியா, வெரைட்டியா இருக்கு. காலையில குடிக்கிற காபி, டீல இருந்து நைட் சாப்பாடுவரை இங்கேயே முடிச்சிடலாம். குடும்பத்தோட வர நல்ல ஹேங் அவுட் ஸ்பாட்’’னு சொன்னார் சந்தோஷமாக.