தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஸான் என எந்தப் பண்டிகை வந்தாலும் நமக்கு ஒன்றுதான். மதப் பாகுபாடின்றி அனைத்தையும் கொண்டாடுபவர்கள் நம்மில் பலர் இருப்பார்கள். அந்த வகையில் டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டால் அது கிறிஸ்துமஸ் மாதம். ஸ்டார், குடில், கேக், பிரியாணி இதுபோன்ற வார்த்தைகளெல்லாம் அடிக்கடி காதில் விழுந்துகொண்டே இருக்கும்.

இந்தக் கொண்டாட்டத்தை நம் வீட்டு குட்டீஸ்க்கும் கொடுப்பதற்காகவே அவள் விகடன் சார்பில் 'Jingle Bells' கிறிஸ்துமஸ் கிராஃப்ட் பயிற்சி ஆன்லைனில் நடைபெற உள்ளது. 28 ஆண்டுகளுக்கும் மேல் கிராஃப்ட் பயிற்சியாளராக இருக்கும் ந.ஷியாமளா தேவி இந்தப் பயிற்சியை அளிக்க விருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கிறிஸ்துமஸ் ஸ்டார் மேக்கிங்
கிறிஸ்துமஸ் ட்ரீ மேக்கிங் (3D effect)
ஃப்ளவர் மேக்கிங் அரவுண்டு தி கிறிஸ்துமஸ் கேண்டில்
இவை மூன்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.100. டிசம்பர் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 முதல் 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும்.

கிராஃப்ட் பயிற்சிகள் குழந்தைகள் நேரத்தைப் பயனுள்ளதாக்குவதுடன் அவர்கள் கற்பனைத் திறனையும் கிரியேட்டிவிட்டியையும் அதிகரிக்கும் என்பது நாமறிந்ததே. இந்தப் பயிற்சியில் உங்கள் வீட்டு குட்டி சுட்டிஸும் பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும்.