Published:Updated:

‘அவள்’ தந்த ஆன்லைன் பயிற்சி உற்சாகம் பொங்கிய குழந்தைகள்!

மிஸ் யூ மிஸ்

பிரீமியம் ஸ்டோரி

``இந்த பென் ஸ்டாண்டை உடனே செஞ்சு, எங்க மிஸ்ஸுக்கு போட்டோ எடுத்து அனுப்பி, `ஹேப்பி டீச்சர்ஸ் டே' சொல்லப்போறேன்'' - `அவள் விகடன்' வழங்கிய ஆன்லைன் கிராஃப்ட் பயிற்சியில் கலந்துகொண்டு கைவினைப் பொருள் செய்யக் கற்றுக்கொண்ட சிறுமியின் உற்சாக வார்த்தைகள் இவை!

‘அவள்’ தந்த ஆன்லைன் பயிற்சி உற்சாகம் பொங்கிய குழந்தைகள்!

பொதுவாகப் பள்ளியில் எல்லா விழாக்களுக்கும் ஆசிரியர்கள்தாம் மாணவர்களைத் தயார் செய்வார்கள். ஆனால், மாணவர்களே விழா ஏற்பாடுகளை எல்லாம் கவனித்து ஆசிரியர்களுக்கு சர்ப்ரைஸ் சந்தோஷம் கொடுக்கும் ஒரு நாள்... ஆசிரியர் தினம். இந்த கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், ஆசிரியர் தினத்தன்று, தங்கள் ஆசிரியர்களை ரொம்ப மிஸ் செய்தனர் மாணவர்கள் பலர். அவர்களுக்கு அவள் விகடன் தந்த சர்ப்ரைஸ் சந்தோஷம்தான்... `மிஸ் யூ மிஸ்' கிராஃப்ட் பயிற்சி!

கைவினைக் கலைஞர் மற்றும் பயிற்சியாளர் ந.சியாமளா தேவி மாணவர்களுக்கு கிராஃப்ட் பொருள்கள் செய்யக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிற்சியில், பெற்றோர் உதவியுடன் பயிற்சிக்கான ஆன்லைன் லிங்க் க்ளிக் செய்து 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ``கிராப்ஃட் பொருள்களை இங்க கத்துக்கிட்டு நீங்க செய்யுற பொருள்களை உங்க மிஸ்ஸுக்கு போட்டோ எடுத்து அனுப்பி `ஹேப்பி டீச்சர்ஸ் டே' சொல்லலாம். ஸ்கூல் திறந்ததும் அவங்ககிட்ட போய் நேர்ல கொடுக்கலாம். ஆர் யூ ரெடி..?'' என்று சியாமளா தேவி கேட்க, கெட் செட் கோ!

 ஆராதனா, பெங்களூரு
ஆராதனா, பெங்களூரு
 ஜோஷித், சென்னை
ஜோஷித், சென்னை

கிராஃப்ட்டுக்குத் தேவையான பொருள்கள் பற்றி நாம் முன்னரே அறிவுறுத்தியிருந்ததால், சில குழந்தைகள் அவற்றுடன் தயாராக இருந்தனர். சியாமளா தேவி ஒவ்வொரு ஸ்டெப்பாகச் சொல்லச் சொல்ல தாங்களும் அதை அப்படியே பின்பற்றி செய்யத் தொடங்கினர். சில குழந்தைகள் பேனா, பேப்பரில் குறிப்பெடுத்துக்கொண்டனர்.

 காவ்யாரஞ்சன், பெங்களூரு
காவ்யாரஞ்சன், பெங்களூரு
 மஹதி, சென்னை
மஹதி, சென்னை

நிகழ்வின் ஹைலைட் கம், கலர் பேப்பர், சார்ட் என எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்து சியாமளா தேவி கற்றுக்கொடுத்த சுவாரஸ்யமான கிராஃப்ட் பொருள்கள். ஒரு மணி நேர பயிற்சியில், பாப் அப் கிரீட்டிங் கார்டு, பென் ஸ்டாண்ட், போட்டோ ஃபிரேம் என மூன்று கிராஃப்ட் பொருள்கள் கற்றுத்தரப்பட்டன. குழந்தைகள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதமாக அவற்றை விளக்கிய சியாமளா தேவிக்கு, `தேங்க் யூ ஸோ மச் மேம்' என்று மெசேஜில் அன்பை பரிசளித்தனர் குழந்தைகள்.

 அம்ருதாஸ்ரீ, ஹரியானா
அம்ருதாஸ்ரீ, ஹரியானா
 விஷ்ணுப்ரியா, சென்னை
விஷ்ணுப்ரியா, சென்னை

நிறைவாக, `மேம்... நாங்க செஞ்சிட்டோம் பாருங்க...' என்று தாங்கள் செய்துமுடித்த கிராஃப்ட் பொருள்களை மாணவர்கள் தங்கள் ஸ்கிரீனில் காட்ட, வாவ்!

 சன்ஸ்கிருதி, சென்னை
சன்ஸ்கிருதி, சென்னை
 யக்ஷிதா, ஹரியானா
யக்ஷிதா, ஹரியானா

`அடுத்த கிராஃப்ட் கிளாஸ் எப்போ மேம்..?' என்று ஆர்வம் பொங்கக் குழந்தைகள் கேட்கத் தவறவில்லை. ஆர்வத்துக்கு நன்றி குட்டீஸ், விரைவில் அவள் விகடனிலிருந்து அறிவிப்பு வரும் காத்திருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு