‘‘இந்த போட்டோக்களைப் பார்க்கிறப்போ நல்லாவும் இருக்கு, மனசுக்குக் கஷ்டமாவும் இருக்கு. பிளாஷ்டிக் யூஸ் பண்றதால பூமிக்கு இவ்வளவு கஷ்டம் ஏற்படுதா?’’ என்ற ஆறாம் வகுப்பு மாணவியின் குரலில், பூமித் தாயையே குழந்தையாக்கிப் பார்க்கும் தாயின் அன்பு ஒலித்தது.

குழந்தைகளிடம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை முன்னிறுத்தி, பல்வேறு விஷயங்களைச் செயல்படுத்திவருகிறது, ‘குக்கூ குழந்தைகள் வெளி’. அதில் ஒன்றாக, ‘தண்ணீரின் மன்னிப்பு’ என்கிற பெயரில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தண்ணீரையும் மண்ணுயிரையும் காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் எம்.பி.என்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சியை நடத்தியது. அஞ்சல் அட்டையில், தண்ணீர் குறித்த ஓவியம் வரைந்தார்கள் மாணவிகள்.

தண்ணீரைக் காப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள், காட்டுயிர்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள், கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மாணவிகள் பார்த்து முடித்ததும், நாடகம் தொடங்கியது.

ஒரு தாய்ப் பறவை, தனது ஐந்து குஞ்சுகளுடன் இயற்கையுடன் இணைந்து வாழ்கிறது. இந்நிலையில், தீயச்சக்தியாக வருகிறான் அவன். அங்குள்ள நீர்நிலையைக் கெடுக்கிறான். ஒரு குஞ்சுப் பறவையைப் பிரித்து, பரிசுகள் கொடுத்து, அந்தப் பறவையின் மூலமே மற்ற நான்கு குஞ்சுகளையும் அடிமைப்படுத்துகிறான். அவற்றின் மூலமே இயற்கையை அழித்து, தனது சுயநலத்துக்குப் பயன்படுத்துகிறான். தாய்ப் பறவையையும் குஞ்சுகளைக் கொண்டே விரட்ட நினைக்கிறான். ஒருகட்டத்தில் தவற்றை உணரும் குஞ்சுகள், ஒன்று சேர்ந்து அந்தச் சுயநலக்காரனை விரட்டி அடிக்கின்றன.

நம் இயற்கை வளத்தை நம்மை வைத்தே அழிக்கும் சுயநலவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அழகாக, நகைச்சுவை கலந்து நடித்துக்காட்டினார்கள், பக்ருதீன் மற்றும் நண்பர்கள். அவர்களின் உடலசைவு ஒவ்வொன்றுக்கும் பெரும் சிரிப்பலை எழுந்தது. இறுதியாக, மாணவிகளுக்குத் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

‘‘உலகின் மிகமிகப் பழைய, மிகப் புராதனமான மருந்து தூயநீர் என்று செக்கோஸ்லோவா பழமொழி ஒன்று இருக்கு. மனிதர்களின் பெரிய பெரிய ஆசைகளால் தண்ணீர் உட்பட இயற்கையின் அத்தனை விஷயங்களும் ஆபத்தில் இருக்கு. அதை இந்தக் குழந்தைகளால்தான் மாற்ற முடியும். இந்தச் சில மணித் துளிகள், அவர்களுக்குள் கேள்வியை எழுப்பும். இயற்கையைப் பாதுகாக்கும் விதையாக இருக்கும்’’ என்றார், ‘குக்கூ’ சிவராஜ்.

‘‘அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கப்போகுதுன்னு சொன்னபோது, ‘நிஜமா வருவாங்களா?’ன்னு கேட்டுட்டே இருந்தாங்க. இப்படியான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு குழந்தையையும் சென்றடையணும்’’ என்றார், பள்ளியின் கணித ஆசிரியை உமா மகேஸ்வரி.

படங்கள்: கோகுல்தாஸ்