Published:Updated:

அந்தக்கால ஐன்ஸ்டீன்... யீ ஷிங்

இன்றைய தினத்தில் பள்ளிக்கூடங்களில் நேரமாகிவிட்டால், தானாகவே மணி அடிக்கும் டெக்னிக் வந்துவிட்டது.

பிரீமியம் ஸ்டோரி

கோயில்களில்கூட ஒரு பொத்தானைத் தட்டினால் மேளம் டமாரம் ஒலிக்கிறது. நேரத்துக்கு மணி ஒலிக்கும் கடிகாரம் எல்லா வீடுகளிலும் உண்டு. இவற்றுக்கெல்லாம் முன்னோடி எது?

அந்தக்கால ஐன்ஸ்டீன்... யீ ஷிங்

அந்தக் காலத்தில் பற்சக்கரங்களால் துல்லியமாக இயங்கிய உலகின் முதல் கடிகாரத்தை உருவாக்கியவர் ஒரு புத்த பிட்சு. அவர் பெயர், யீ ஷிங் (Yi Xing) சீனாவின் டாஸ் பேரரசில் கி.பி.618-ல் பிறந்தார். கணக்கில் சூரரான யீ ஷிங், வானசாஸ்திரம், கால நிர்ணயம் போன்ற வகை கணக்குகளில் அவரை யாராலும் வெல்லமுடியவில்லை. மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி பல கிளைகளுடன் பாய்ந்த மஞ்சள் நதியின் நீளத்தை தனது 11 வயதிலேயே கணக்கிட்டுச் சொல்லி அசரவைத்தவர். அவரை டாஸ்ஷி மன்னர் தனது அவைக்கு அழைத்து கால நேரம் காட்டும் கருவியைச் செய்யமுடியுமா என்று கேட்டார். உடனே, எந்தெந்த தேதியில் சூரியக் கிரகணம் வரும் என மடமடவென்று தேதிகளை அடுக்கினார் அந்தக் குட்டி புத்த பிட்சு. நாட்டின் நாட்காட்டியைச் சரிசெய்தும், ஒரு கால நிர்ணய வழிகாட்டியை வழங்கியும் உதவுங்கள் என மன்னர் சரணடைந்தார். அடுத்த மூன்றே மாதங்களில், யீ ஷிங் செய்தது அசத்தல் வேலை. கச்சிதமான இரவு வான் வரைபடத்தை முதலில் தந்தார். வியட்நாமின் ஜியாஷு ஊர் முதல் பெய்கால் ஏரி வரை 13 வானியல் கண்காணிப்பு நிலையங்களை அமைத்து, நட்சத்திரங்களின் நகர்வை எப்படிப் பதிய வேண்டும் என்று 600 பேருக்குப் பயிற்சி தந்தார்.

யீ ஷிங்
யீ ஷிங்

ரோபோட் போலவே ஓடும் அந்தக் காலப் பொறியியல் அதிசயமான, பிரமாண்ட தானியங்கி கடிகாரத்தை வடிவமைத்தார் யீ ஷிங். அதுவரை ஒரு தூண்தான் கடிகாரமாக இருந்தது. அதன் நிழல் சூரிய ஒளியால் எப்படி மண்ணில் விழுகிறதோ, அதைவைத்து நேரத்தைக் கணக்கிடுவார்கள். அதற்குச் சூரிய கடிகாரம் என்று பெயர். யீ ஷிங் தனது கடிகாரத்தை உருவாக்கி 2,000 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு பல்சக்கம் மெதுவாகச் சுழன்றபடி இருக்கும். ஆங்கில T வடிவில் ஒரு பெண்டுலம் இப்படியும் அப்படியுமாக நொடிகளின் துல்லியத்தோடு அசையும். பல்சக்கரத்தை சுழற்றிட, தண்ணீரை ஆவியாக்கி ஆற்றலாகப் பயன்படுத்தினார் யீ ஷிங். மணிக்கு ஒருமுறை ஒரு மனித பொம்மை அறையிலிருந்து வெளியே வந்து, பெரிய மணியை அடிக்கும். கால் மணிக்கு ஒருமுறை குட்டி பொம்மை இரண்டு டமாரத்தை அடிக்கும். இந்தக் கடிகாரம் அரண்மனை வாயிலருகே அமைக்கப்பட்டது. சீனாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலிருந்து மக்கள் கூட்டம் இதைக் காண்பதற்கு அலை மோதியது. சீனாவின் ஷிஜியாஸ் மாகாணத்தில் டியாண்டாய் மலையின் அருகே நின்றபடி, அந்தப் பிரமாண்டமான கடிகாரம் இன்றும் ஒலித்து, யீ ஷிங்கின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு