2019 ஜூலை... டென்னிஸ் விளையாட்டின் பெரும் கிராண்ட் ஸ்லாம்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டி, இங்கிலாந்தில் நடந்துமுடிந்தது. இந்த விம்பிள்டனில் ஆச்சர்யம், 15 வயதேயான காரி கோகோ காஃப். மிக இளம் வயதில் விம்பிள்டன் போட்டியில் விளையாடத் தகுதிபெற்ற வீராங்கனை. முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி தோல்வியைப் பரிசளித்து உலகின் கவனம் ஈர்த்தார்.

யார் இந்த கோகோ?

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள வீனஸ் வில்லையம்ஸை, விம்பிள்டனின் முதல் சுற்றிலேயே வீழ்த்தினார் கோகோ. நேர்த்தியான ஷாட்ஸ், போராட்ட குணத்துடன் வெளிப்பட்ட கோகோவின் ஆட்டத்துக்கு எக்கச்சக்க ரசிகர்கள். அவரிடம் இருந்த தன்னம்பிக்கையே இந்த வெற்றியைப் பரிசளித்தது.

கொகோவின் ‘ரோல் மாடல்’ யார் தெரியுமா? அவர் வீழ்த்திய வீனஸ் வில்லியம்ஸ்தான். ‘பல வருட அனுபவம்பெற்ற வீனஸ் வில்லியம்ஸ், எத்தனை கிராண்ட் ஸ்லாம் முதல் சுற்றுகளை விளையாடி இருப்பார்? அவருடன் சின்னப் பெண்ணகிய நான் மோதுவதா? இதில், நிச்சயம் வீனஸே வெல்வார் என்று தனது ரோல் மாடல் மீது நம்பிக்கை வைப்பதா, தனக்குக் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பில் வெற்றிபெற்று தன்னைத் தயார் படுத்துவதா?’ என்று கோகோ யோசித்தார்.

கோகோ இரண்டையும் செய்தார். சிறு வயதிலிருந்தே வீனஸின் ஆட்டங்களைப் பார்த்து வளர்ந்த கோகோவுக்கு, அவரை எதிர்கொள்வதில் பெரிய சிரமமில்லை. எந்த இடத்தில் வீனஸ் பலவீனமடைகிறாரோ, அந்த இடத்தை கோகோ பயன்படுத்தினார். ஏழு வயதில் தொடங்கிய கோகோவின் டென்னிஸ் பயிற்சி, இந்தப் போட்டியில் கைகொடுத்தது. முடிவு, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்று, டென்னிஸ் நட்சத்திரமானார்.

இரண்டாவது, மூன்றாவது சுற்றுகளையும் வென்ற கோகோ, நான்காவது சுற்றில் முன்னணி வீராங்கனை ஷிமோனா ஹலெப்பை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே ஷிமோனாவை எதிர்கொள்வதில் இருந்த சவாலை கோகோ உணர்ந்திருந்தார். 6-3 என முதல் செட்டை இழந்தார். இரண்டாவது செட்டில் கடைசி வரை போராடினார். ஆனால், கோகோவால் வெற்றிபெற முடியவில்லை. ஷிமோனாவிடம் தோல்வியடைந்து, விம்பிள்டனிலிருந்து வெளியேறினார்.

அவர் டென்னிஸ் கோர்ட்டைவிட்டு வெளியேறும் வரை கைதட்டல்கள் ஒலித்துகொண்டே இருந்தது. கோகோவின் விடாமுயற்சிக்கு ரசிகர்கள் தந்த பரிசு அது.

விம்பிள்டன் தொடர் ஆரம்பத்தில், டென்னிஸ் தரவரிசையில் 313ஆம் இடத்தில் இருந்த கோகோ, தொடரின் முடிவில் 141-வது இடத்துக்கு முன்னேறி அசத்தினார். வெற்றிபெற்றபோது என்ன மனநிலையில் இருந்தாரோ, அதே மனநிலையில்தான் தோல்வியையும் எதிர்கொண்டார். தோல்விக்குப் பிறகு கோகோ சொன்னது, “இதுதான் ஆரம்பம்!”

ஆமாம் சுட்டீஸ்... வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வருபவை. வெற்றி உற்சாகம் தந்து அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும். தோல்வி நமது தவறை உணர்த்தும். அதை, அடுத்த வெற்றிக்கான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது நமக்குப் பிடித்த விஷயமாக இருந்தால், தோல்வி ஒரு விஷயமாகத் தெரியாது.

பாட்டு, நடனம், விளையாட்டு என எந்தத் துறையாக இருந்தாலும், உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து அசத்துங்கள். ஏனென்றால், கோகோவைப் போல உங்களுக்கும் இதுதான் ஆரம்பம்!