பொது அறிவு
Published:Updated:

ஒப்பனை 10

ஒப்பனை
பிரீமியம் ஸ்டோரி
News
ஒப்பனை

மனித நாகரிகத்தில் ஆடையில் தொடங்கிய ஒப்பனை, இன்று பல்வேறு வகையில் வளர்ந்துள்ளது. அந்த ஒப்பனை பற்றிய 10 விஷயங்கள்...

1. உலகிலேயே முதன்முதலில் உதட்டுச்சாயம் (Lipstick) தயாரித்துப் பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் என்றால் நம்புவீர்களா? கி. மு. 3300ஆம் ஆண்டுகளிலேயே இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் உதட்டுச்சாயம் பயன்படுத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்னரே, எகிப்து, அரேபியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் பரவின.

2. தேன்மெழுகு மற்றும் தாவரங்களிலிருந்து உருவாக்கிய கூழ்மமே, இன்றைய நவீன உதட்டுச்சாயங்களின் முன்னோடி. வணிகர்களின் வாழியாக உதட்டுச்சாயம் பற்றியத் தகவல் மெசபடோமியா வரை பரவியது. அவர்கள் கி.மு. 1500ஆம் ஆண்டுகளில் நகைகளைப் பொடியாக்கி உதட்டுச்சாயமாகப் பூசினர்.

ஒப்பனை 10

3. கண் மை பூசும் வழக்கத்தை முதன்முதலில் ஆரம்பித்தது, எகிப்தியர்கள். கண் மைக்குத் தமிழில் ‘அஞ்சனம்’ என்றும் அழகான பெயர் உண்டு.

4. கண் இமைகளுக்குப் பயன்படுத்தும் மஸ்காரா (Mascara) என்பது ஸ்பானீஷ வார்த்தையிலிருந்து உருவானது எனப்படுகிறது. ‘திரை’ எனப் பொருள்கொண்ட மஸ்சேரா ( maschera) என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்தது என்றும் ஒரு கருத்து உள்ளது.

ஒப்பனை 10

5. பெண்கள் கைகளில் வைத்துக்கொள்ளும் மருதாணி, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். இளநரையைப் போக்கவும், தூக்கம் வரவும் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்துக்கொள்ளலாம்.

6. மன்னர் ஆட்சிக் காலத்தில் பூட்டானில் ஆண்கள் மற்றும் பெண்கள் முழங்கால் வரை நீளும் ஆடையை அணிவர். ஆண்களின் ஆடை, கஹோ ( Gho) எனப்படும். உடையின் முன்பகுதியில் உணவு மற்றும் கத்தி வைக்க ஒரு பை இருக்கும். இப்போதும் சிலர், செல்போன், பணம் மற்றும் டோமா ( Doma) எனப்படும் பாக்கு வைக்கப் பயன்படுத்துகிறார்கள்.

7. சம்ஸ்கிருத மொழியில் தவுத்தா, ஒரிய மொழியில் தோத்தி, குஜராத் மொழியில் தோத்தியு, அசாமிய மொழியில் சூரியா, வங்காள மொழியில் தூட்டி, கன்னடத்தில் கச்சே, தெலுங்கில் தோத்தி, மராத்திய மொழியில் தோத்தர், பஞ்சாபியில் லாச்சா என்றும் அழைக்கப்படுவது வேட்டி.

ஒப்பனை 10

8. தோடு, கொப்பு, ஓலை, குழை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல், டோலாக்கு, தண்டட்டி... இவையெல்லாம் காதில் அணியும் அணிகலன்களின் பெயர்கள்.

ஒப்பனை 10

9. தண்டட்டி என்பது பாட்டிகள் அணியும் காதணி வகைகளில் ஒன்று. தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்டு கனமாக இருக்கும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதை பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைப்பார்கள்.

10. வளையல் என்பதற்கான ஆங்கில வார்த்தை Bangle. இது, பங்க்ரி (கண்ணாடி) என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்தது. வளையல் அணிவதால் கைகளில் உள்ள நரம்புகள் வழியே சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும்.