யாராவது ஓவராகப் பேசினாலோ, அலட்டிக்கொண்டாலோ, ‘பெரிய ஹீரோன்னு நெனப்பு’ எனச் சொல்வோம். சினிமாவில், கதையின் நாயகனா நடிப்பவரை ஹீரோ எனச் சொல்வோம். அந்தப் பெயர் வரக் காரணமான மனிதர்தான், ஹீரோ. Hero of Alexandria எனச் சொல்லப்படும் சூப்பர் விஞ்ஞானி. பலவகையான கண்டுபிடிப்புகள் மூலம், அந்தக் காலத்தின் ஐன்ஸ்டீனாக மிளிர்ந்தவர்.

கி.பி.1000-ல் பிறந்தவர், ஹீரோ. உலகெங்கும் சென்று, கல்வி கற்றதாக வரலாறு சொல்கிறது. 19 வயதிலேயே அலெக்சாந்திரியாவின் பிரபல கல்வியகமான ‘முசியேம்’ பள்ளியில் கணித ஆசிரியர் ஆனார்.

அந்த முசியேமில் உலகின் முதல் அருங்காட்சியகத்தை 21 வயதில் ஒரு மைல் நீளத்துக்கு அமைத்து, அனைவருக்கும் ஆச்சர்ய அதிர்ச்சியைக் கொடுத்தார் ஹீரோ. உலகம் முழுதும் அருங்காட்சியம் எங்கே வைத்தாலும், அதற்கு மியூசியம் (முசியேம்) என்ற பெயர் வந்தது அங்கிருந்துதான். அந்தக் காலத்தில் கணிதம், இயற்பியல். இயந்திரவியல் மற்றும் ரப்பர் குறித்த அறிவியலில் மாமேதையாக மிளிர்ந்தவர், ஹீரோ.

தானியங்கி பொருள்கள் அறிமுகமானது இருபதாம் நூற்றாண்டில்தான். ஆனால், அப்போதே அலெக்சாந்திரியாவில் ஏழு விதமான தானியங்கி சாதனங்களை அறிமுகம் செய்திருந்தார் ஹீரோ. அவற்றில் முக்கியமானது, தானியங்கிக் கதவுகள்.

அலெக்சாந்திரியா நூலகம் உலகப் பிரசித்திபெற்றது. அங்கே வரும் ஒருவர், மூடிய கதவின் முன்பு நிற்பார். அவரது எடையில், அந்த இடத்தின் அடிப்பகுதியில், மிக அழுத்தத்தோடு தண்ணீர் வெளியேறி, காற்றினால் புறந்தள்ளப்படும். அது தரும் மிகு அழுத்தம் குழாய் வழியே, மேலும் வேகத்தோடு நீரைத் தள்ளி, பிரமாண்ட கதவுகளைத் திறக்கும். பிறகு, நிற்பவர் கடந்தால், பழையபடி எதிர்த்திசையில் இதே விஷயம் செயல்பட்டு கதவு மூடிக்கொள்ளும். நூலகத்துக்கு புத்தகம் படிக்கச் சென்றவர்களைவிட தானாகக் கதவு திறக்கும் சூட்சமத்தை அனுபவிக்கச் சென்றவர்களே அதிகம்.

‘ஹீரோ இயந்திரம்’ என ஒரு கருவி போற்றப்படுகிறது. அதுதான், முதல் நீராவி இன்ஜின். கி.பி.1027 ஆம் ஆண்டில், ஹீரோ உருவாக்கிய அதிசயம். குறுகிய துளை வழியே நீராவி வெளியேறி, உருளையைச் சுழலவைக்கும் இந்தக் கருவிதான், பிற்கால நீராவி ரயில் இன்ஜினாகவும் கப்பலாகவும் உருமாறிய அடிப்படை அறிவியல். இதுபோல அலெக்சாந்திரியா கோயிலில் ஒரு தானியங்கிக் கருவி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட வெள்ளிக்காசு போட்டால், புனித நீர் சரியாக ஒரு குவளை கொட்டி நின்றுவிடும். ஹீரோ கண்டுபிடித்தவை கருவிகள் மட்டுமல்ல. கணித நிபுணராக அவர், முக்கோணங்களின் பரப்பளவை காண, தனியே ஒரு சமன்பாட்டை வழங்கியவர். அதற்கு, ‘ஹீரோ சமன்பாடு’ என்றே பெயர். ஒரு எண்ணின் வர்க்க மூலம் காணும் முறையை முதலில் தந்தவர் இவரே.

அதுமட்டுமா? உண்டிவில் என்கிற ரப்பர்-கல் கருவியைத் தந்தவர், இவர்தான். அதையே பெரிய அளவில் செய்து பிரமாண்ட கற்களை எதிரி படை மீது வீசி கிரேக்கப் போர் வீரர்கள் அசத்தினார்கள்.

இப்படி அறிவியலின் அற்புதங்களைச் சாதித்த ஹீரோ, அந்தக் கால ஐன்ஸ்டீன் என்பதில் சந்தேகமே இல்லை.