Published:Updated:

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

இந்தியா சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதன. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில்தான் தயாரிக்க வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி

இந்தியா - தேசியக்கொடி!

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

ல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களால் பல்வேறு மாற்றங்களைக் கண்ட இந்திய தேசியக்கொடி,1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்பட்டது. அப்போது அதனை வடிவமைத்தவர், பத்ருதின் தியாப்ஜி (Badruddin Tayyabji). மனைவி சுரையா தியாப்ஜியின் மூலம் கதர் துணியில் உருவாக்கி ஒப்படைத்தார். இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951ஆம் ஆண்டில், இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 17, 1968-ல் சில மேம்படுத்தப்பட்ட முறைகள் கொண்டுவரப்பட்டன. இதன்படி, கொடியின் நீளம், அகலம், நிறங்களின் அடர்த்தி, துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரம் என விதிமுறைகள் உள்ளன.

- யுவா

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

நேபாளம் - தேசிய விளையாட்டு!

9,000 ஆண்டுகளுக்கு முன்னரே நேபாளத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் திபேத்திய-மியான்மார் இன மக்கள் வசித்துள்ளனர். பின்னர், பல சிற்றரசுகள் தோன்றின. அப்படியான அரசர்களில் ஒருவர்தான் கெளதம சித்தார்த்தன் என்கிற புத்தர். இவர் பெளத்த மதத்தை உருவாக்கினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடான நேபாளத்தில், இயற்கை எழிலுக்குப் பஞ்சமில்லை. எனவே, இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. இந்த நாட்டின் தேசிய விளையாட்டு என்ன தெரியுமா? அதற்கு நேபாளத்தில் தாண்டி பியோ (Dandi Biyo) என்று பெயர். இங்கே கிரிக்கெட், கால்பந்து ஆகியவற்றை மையமாக வைத்து திரைப்படங்கள் வருவது போல, தாண்டி பியோவை மையப்படுத்தி 2018-ம் ஆண்டு Damaru Ko Dandibiyo என்ற நேபாளத் திரைப்படம் வெளியானது.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

- யுவன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

ஜப்பான் - ஒலிம்பிக் அசத்தல்!

2020ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கப்போவது, ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில். இது, 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி. 2020 ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. 206 நாடுகள், 11,091 தடகள வீரர்கள் பங்கேற்கப்போகிறார்கள். கிரீஸில் பாரம்பர்ய முறையில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி (Torch relay), ஜப்பானின் புகுஷிமாவில் பயணத்தைத் தொடங்கும் இந்த ஒலிம்பிக்கில் அனைவரின் கவனத்தை ஈர்த்திருப்பது, மாஸ்காட் ரோபோ (Mascot Robot) என்ற இயந்திர மனிதன். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் எறியும் ஈட்டி போன்றவற்றை எடுத்துவருவது முதல் பல முக்கிய விஷயங்களில் புகுந்து விளையாடப்போகிறது. வேகமாக நகரும் கைகால்களும் கண்கள் நட்சத்திரம் மற்றும் இதய வடிவிலும் மாறக்கூடியவை.

- பா.கவின்

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

பாகிஸ்தான் - பாரம்பர்ய கோட்டை!

பாகிஸ்தானில் உள்ள சாஹி கிலா (Shahi Qila) எனப்படும் லாகூர் கோட்டை, உலகின் தொன்மை வாய்ந்த இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. லாகூர் நகரின் வடமேற்கே, இக்பால் பூங்காவில் அமைந்திருக்கும் இந்தக் கோட்டையை முதலில் கட்டியது யார் என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. முகலாயர் காலத்தில் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, கி.பி.1556–1605 காலகட்டத்தில் அக்பர் ஆட்சியில் பெரிதும் கட்டமைக்கப்பட்டது. அக்பர் காலத்தைச் சேர்ந்த 27 நினைவுச் சின்னங்கள் இங்கு உள்ளன. கோட்டைக்கு இரண்டு வாயில்கள். ஔரங்கசீப் கட்டிய வாயில் ‘ஆலம்கிரி வாயில்’ எனப்படுகிறது. அக்பர் கட்டிய பழைய வாயில் மசூதி வாயில் எனப்படுகிறது. இந்தக் கோட்டையில் காணப்படும் சிற்பங்கள், இந்து மற்றும் முஸ்லிம்களின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. அதேபோல லாகூரில் இருக்கும் விலங்கியல் பூங்கா, உலகின் பழைமையான விலங்கியல் காட்சிப் பூங்காவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

- பா.கவின்

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

சிங்கப்பூர் - நீச்சல் நாயகன்!

2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் `பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக்’ நீச்சலில் தங்கப் பதக்கம் வென்ற ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling), சிங்கப்பூரைச் சேர்ந்தவர். தற்போது 24 வயதாகும் இவர், தனது கல்லூரி வாழ்க்கையை டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முடித்தார். சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில் திட்டத்தில், மோனாஷ் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பின் கீழ், ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர்களால் பயிற்சி பெற்றவர் ஜோசப் ஸ்கூலிங். ஒலிம்பிக்கில் தன் குருவான மைக்கெல் பெல்ப்ஸின் சாதனையை முறியடித்தார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் சிங்கப்பூர் வீரரும் இவர்தான். தனது சிறப்பான சாதனைகளுக்காக, சிங்கப்பூரின் சேவை பதக்கம் பெற்றவர். 2018ஆம் ஆண்டில், நீச்சல் பயிற்சி பள்ளி தொடங்கி பலருக்கும் பயிற்சி அளித்துவருகிறார்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

- வெ.கெளசல்யா

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

கம்போடியா - பனைகளின் தேசம்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் 14 மில்லியன் மக்கள் உள்ளனர். கம்போடியா நாட்டின் அடையாளங்களில் ஒன்று பனை மரம். அந்த நாட்டில் பனை மரம் இல்லாத பூங்காக்களே இருக்காது. எந்தப் பக்கம் சென்றாலும் பனைவெல்லம், கருப்பட்டி முதலானவை கிடைக்கும். பதநீர் அனைவர் வீட்டிலும் இன்றியமையாத பானமாக உள்ளது. இப்போதும் பனை வீடுகளில் அந்நாட்டு மக்கள் வசிக்கின்றனர். பனை ஓலைகளைப் பயன்படுத்தி பல பொருள்களைத் தயாரிக்கின்றனர். வீட்டுக்குத் தேவையான பல உயபோகப் பொருள்களையும் பனை ஓலைகளிலேயே செய்துவிடுகிறார்கள். பனங்குருத்து, பனம்பழம், பனங்கிழங்கு போன்றவையும் இங்கு பிரபலம். அழகுக்காக கம்போடியா மக்கள் அணிவதும் பனைத் தொப்பிகளையே. கம்போடியாவின் முக்கிய பணம் ஈட்டும் பயிராகப் பனை உள்ளது.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

- வெ.கெளசல்யா

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

சீனா - கெட்சப் தாயகம்!

ன்று பலரும் விரும்பி உணவுப் பொருளுடன் சேர்த்துக்கொள்ளும் கெட்சப் (Ketchup) பிறந்த இடம் சீனா. ஆரம்ப காலத்தில் பதப்படுத்தப்பட்ட மீன் சாற்றை உணவாக உட்கொண்டார்கள். அதை, ‘கெசியப்’ என்று அழைத்தார்கள். பின்னர், தக்காளியைப் பதப்படுத்தி அந்தச் சாற்றைப் பயன்படுத்தினார்கள். அதற்கு, மலாய் மொழியில் உள்ள ‘கெசப்’ என்ற வார்த்தையிலிருந்து ‘கெட்சப்’ என்ற பெயரை வைத்தனர். சீனாவிலிருந்தே உலகம் முழுவதும் கெட்சப் பரவியது. ஆரம்பக் காலங்களில் சோயா சாறு, காளான் சாறு, மீன் சாறு என அனைத்தையும் கெட்சப் என்றே குறிப்பிட்டார்கள். இந்தச் சாற்றில் இஞ்சி, பூண்டு, சர்க்கரை ஆகியவற்றை சேர்ப்பார்கள். கெட்சப் செய்வதற்கான தக்காளியை உற்பத்தி செய்வதிலும் சீனா முதல் இடத்தில் உள்ளது. இன்று குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பும் உணவாக கெட்சப் உள்ளது.

- வெ.கெளசல்யா

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

பூட்டான் - மகிழ்ச்சி தேசம்!

சியாவிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு, உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் எட்டாவது இடம் என்ற பெருமைகள் பெற்றது, பூட்டான். பண்பாடுகளைப் பேணிப் பாதுகாப்பதில் பூட்டான் மக்கள சிறந்தவர்கள். உலக வரலாற்றில் அடிமையாகாத சில நாடுகளில் பூட்டானும் ஒன்று. போரிட வந்தவர்கள் எல்லோருமே தோற்று ஓடியிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் நாட்டில், முதலாவது மக்களாட்சித் தேர்தல் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. பூட்டானின் மன்னராக இருந்த ஜிக்மே சிங்கே வாங்சுக், 2006 டிசம்பர் 9ஆம் தேதி, தனது பொறுப்புகளை, ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck) என்ற மூத்த மகனிடம் ஒப்படைத்தார். பின்னர், ஜனநாயக முறைப்படி தேர்தலும் நடந்து, வாங்சுக் வம்சம் பொறுப்பேற்ற நூறாவது ஆண்டான 2008-ல், பூட்டான் நாட்டின் தலைவரானார். அப்போது இவரது வயது 28.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

- யுவன்

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

புருனை - கோடிகளின் அதிபர்!

‘சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல் போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னி அல்மார்ஹம் சுல்தான் ஹாஜி ஓமர் அலி சாய்புதீன் சாஅதுல் காய்ரி வாத்தியன் சுல்தான்’ என நீண்ட பெயர்கொண்டவர், ஹஸனல் போல்கியா (Hassanal Bolkiah). இந்தோனேசியா அருகே உள்ள குட்டி நாடு புருனை. உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் மிக முக்கியமானது. 1967 அக்டோபர் 5-ம் தேதி, இந்த நாட்டின் 29-வது சுல்தானாகப் பதவியேற்ற இவர்தான், உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரர். இவர் வசிக்கும் அரண்மனையில் 1788 அறைகளும் 257 குளியலறைகளும் உள்ளன. பல அறைகளின் சுவர்களைத் தங்கத்தைக் கொண்டு மறைப்புகளை உருவாக்கியுள்ளார். கார்கள் மீது சுல்தானுக்கு மிகுந்த ஆர்வம். இதுவரை 7,000 கார்களுக்குச் சொந்தக்காரர். 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருப்பவர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

- யுவன்

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

இலங்கை - இராவணன்-1

லங்கையின் முதல் செயற்கைக்கோள், ஏப்ரல் 19, 2019 அன்று விண்ணில் ஏவப்பட்டது. ஜப்பானின் கியூஷு தொழிநுட்ப நிறுவனத்தில், தரிந்து தயாரத்னே மற்றும் துலானி சாமிகா (Tharindu Dayaratne and Dulani Chamika) என்ற இலங்கைப் பொறியாளர்கள் இந்தச் செயற்கைகோளை உருவாக்கினர். ‘ராவணா 1’ எனப் பெயரிடப்பட்ட இந்தச் செயற்கைகோள், நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவுகணை மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து ஏவப்பட்டது. வானில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியவுடன் நாள் ஒன்றுக்கு 15 முறை பூமியைச் சுற்றிவரத் தொடங்கியிருக்கிறது. இதன் வேகம், விநாடிக்கு 7.6 கிலோமீட்டர். இலங்கை மற்றும் அருகில் உள்ள நாடுகளை புகைப்படம் எடுப்பது இதன் பணி.

ஒரு நாடு ஒரு செய்தி - ஆசியா

- வெ.கெளசல்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு