Published:Updated:

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், சார்லஸ் டி காஹ்லி (Charles de Gaulle) ஒரு வித்தியாசமான சாதனைக்குச் சொந்தக்காரர்.

பிரீமியம் ஸ்டோரி

பிரான்ஸ் - கில்லி(ங்) கின்னஸ்!

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

திகமுறை படுகொலை முயற்சியிலிருந்து இவர் தப்பித்ததற்கான கின்னஸ் சாதனைதான் அது. பிரெஞ்சு ராணுவத்தின் தளபதியாக இருந்தவர், முதல் உலகப் போரின்போது கைதியாக எதிரிகளின் சிறைகளில் இருந்துள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது, சுதந்திர பிரான்ஸ் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். பிரான்ஸ் விடுதலை பெற்றதும் 1944ஆம் ஆண்டில் பிரெஞ்சு குடியரசின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகி, புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். 1950ஆம் ஆண்டின்போது, கட்சிப் பணிகளிலிருந்து விலகிவிட்டார். 1958ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, சார்லஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்தது. 1969ஆம் ஆண்டு இவராகவே பதவியைவிட்டு விலகினார். 32 முறை தீவிரவாதப் படுகொலைத் தாக்குதலிலிருந்து தப்பித்த சார்லஸ், தனது 79ஆவது வயதில் (1970) உடல்நலக் குறைவினால் காலமானார்.

- ச. கெளதம் ராஜா

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

இத்தாலி - சாதனையும் வேதனையும்!

லக அளவில் அதிகமான சுற்றுலாப் பயணிகளை கவரும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது இத்தாலி. உலகின் மிகச் சிறிய நாடான வாட்டிகனை தன்னகத்தே கொண்டிருப்பதும் இத்தாலிதான். ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகமான நிலநடுக்கம் உண்டாகிய நாடாகவும் இத்தாலி இருக்கிறது. ஐரோப்பாவின் மிக முக்கியமான மூன்று எரிமலைகள் இந்த நாட்டில்தான் இருக்கின்றன. எட்னா (Etna) ஸ்ட்ரோம்போலி (Stromboli) வெசுவிஸ் (Vesuvius) என்பவையே அவை. நாகரிகத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், மூடநம்பிக்கைகளை அதிகம் நம்புகிறவர்கள் இத்தாலி தேசத்து மக்கள். கருப்பு பூனை தெருவின்‌ குறுக்கே சென்றால் அபசகுணம் என்ற விஷயம், இத்தாலியிலிருந்துதான் பிற தேசங்களுக்குப் பரவியது. இப்போதும் இத்தாலியில் 17 என்ற எண்ணை விடுதிகளிலோ, வேறு விஷயங்களிலோ பலரும் பயன்படுத்துவதில்லை. காரணம், ரோமானிய எண்ணில் அதை மரணத்தின் குறியீடாக அவர்கள் நம்புகின்றனர்.

- ச. கெளதம் ராஜா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

ரஷ்யா - ஆஹா... ஆச்சர்யம்!

லகிலேயே மிகப்பெரிய பெரிய நாடு ரஷ்யா. 17 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நாடு புவி அமைப்பின்படி இன்னோர் ஆச்சர்யத்தையும் கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த நாடாக இருந்தபோதிலும், ஆசிய கண்டத்திலும் இதன் மிச்சங்கள் உள்ளன. ஆமாம்! 22 சதவிகித ரஷ்ய மக்கள், ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றே சொல்லலாம். 1908ஆம்‌ ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற்றன. ஏப்ரல் 27 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பங்கேற்க, ரஷ்ய ஒலிம்பிக் விளையாட்டுக் குழு, 12 நாள்கள் தாமதமாக லண்டனில் வந்து இறங்கின. காரணம் என்ன தெரியுமா? கிரிகோரியன் காலண்டர்படி, இந்தப் போட்டிகளை லண்டன் அறிவித்திருந்தது. அது தெரியாமல், பழைய ஜுலியன் நாள்காட்டியின்படி மெதுவாக வந்துசேர்ந்தார்கள் இவர்கள். 1917ஆம் ஆண்டில்தான், கிரிகோரியன் காலண்டர் முறை அதிகாரபூர்வமாக வந்தது.

- ச. கெளதம் ராஜா

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

ஆஸ்திரியா - சிவப்பும் வெள்ளையும்!

ழைமைகளுக்குப் பெயர்போன மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, ஆஸ்திரியா. ஒன்பது மாநிலங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இதன் தலைநகரம், வியன்னா (Vienna). மதச் சுதந்திரம் அதிகம் அளிக்கும் நாடு இது. அந்நாட்டில் 14 வயது கடந்த யாரும், எந்த மதத்தையும் தேர்வுசெய்து பின்பற்றலாம். ஆஸ்திரிய நாட்டின் தேசியக்கொடி, 1918 மே 1ஆம் தேதி, நாட்டின் அரசால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாக இரண்டு சிவப்புப் பட்டைகளும் நடுவில் ஒரு வெள்ளைப் பட்டையுமாக இருக்கும். அந்நாட்டின் நிலப்பிரபுவான ஐந்தாம் லியோபோல்ட் (Leopold V), ஒரு கடுமையான யுத்தத்தில் போரிட்டார். அவரின் வெள்ளை நிற மேலங்கி முழுவதும் ரத்தமாகிவிட்டது. தான் அணிந்திருந்த பெல்ட்டை கழட்டினார். அந்தப் பகுதி மட்டும் வெள்ளையாக இருந்ததைக் கண்டார். அவர் வீரத்தைக் குறிக்கும் விதமாக இந்தக் கொடி உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

- ச. கெளதம் ராஜா

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

பெல்ஜியம் - சிவப்புப் பேய்கள்!

ன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான (International Federation of Association Football) ஃபிஃபா-வின் தரவரிசையில், முதல் இடத்தில் இருக்கும் கால்பந்து அணி, பெல்ஜியத்தின் தேசிய கால்பந்து அணி. சிவப்புப் பேய்கள் (The Red Devils) எனச் செல்லமாக அழைக்கப்படுகிறது. கடைசியாக, 2019 ஜூலை 25ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 1746 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெல்ஜிய அரசு கால்பந்து சங்கமே, ஐரோப்பிய கண்டத்தின் மிகப் பழைமையான கால்பந்து சங்கம். கால்பந்து மட்டுமே அனைத்து பெல்ஜியர்களையும் ஒன்றிணைத்து, அனைத்துக் கருத்து வேறுபாடுகளையும் மறக்கச் செய்யக்கூடிய ஒரே விஷயம் என்பார்கள். 1980ஆம் ஆண்டு, யூரோ கோப்பையில் இரண்டாவதாகவும் 1920ஆம் ஆண்டு, சொந்த மண்ணில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்ற அணி இது.

- வே.அபிநய சௌந்தர்யா

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

பல்கேரியா - பால்... தயிர்... பாக்டீரியா!

ரோப்பாவின் தென் கிழக்கே அமைந்திக்கும் நாடு பல்கேரியா. பண்டைய காலத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள் வாழ்ந்தனர். பின்னர், கிரேக்கர்களும் ரோமானியர்களும் இங்கு குடியேறினர். அதன்பின்னர், ஐரோப்பாவின் பலம்பொருந்திய பல்கேரியப் பேரரசு நிறுவப்பட்டது. இந்த நாட்டை தயிரின் தாயகம் என்பர். பல்கேரியர்கள், ‘புளிப்பு பால்’ என்ற பெயரில் தயிரைக் குறிப்பிடுவார்கள். அவர்கள் தயாரிக்கும் தயிர், ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழவைக்கிறது. பல்கேரியத் தயிரின் தனித்துவமான சுவைக்கும் நிலைத்தன்மைக்கும் காரணம், பாலை நொதிக்கச் செய்யும் லாக்டோபாகிலஸ் பல்கேரியஸ் (Lactobacillus bulgaricus) என்ற பாக்டீரியா, பல்கேரிய காற்றில் பாவியுள்ளது.

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

- வே.அபிநய சௌந்தர்யா

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

ருமேனியா - பிரமாண்ட பாராளுமன்றம்!

லும்புகளுடன் கூடிய குகை (The Cave with Bones) என்ற இடத்தில்தான் ஐரோப்பாவின் மிகவும் பழைமையான மனித எலும்புக்கூடுகளையும் சின்னங்களையும் கண்டறிந்தனர். இந்த அழிபாட்டுச் சின்னங்கள் 42,000 ஆண்டுகள் பழைமையானவை எனப்படுகிறது. அது இருக்கும் நாடு ருமேனியா. இதன் தலைநகரம் புக்கரெஸ்ட் (Bucharest). இங்கு செயல்படும் பாராளுமன்ற அரண்மனை, உலகின் மூன்றாவது பெரிய கட்டடமாகும். பென்டகனுக்கு அடுத்து உலகின் பெரிய பாராளுமன்றமாக உள்ளது. 3,65,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் இந்த அரண்மனையில் 1,100 அறைகள் உள்ளன. இவற்றில் 400 அறைகளும் இரண்டு கூட்ட அரங்குகளுமே அரசு செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

-வே.அபிநய சௌந்தர்யா

ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா
ஒரு நாடு ஒரு செய்தி - ஐரோப்பா

ஜெர்மனி - இசைக்கும் கட்டடம்!

ஜெர்மனியில் உள்ள சிறிய நகரம் டிரஸ்டன் (Dresden). சுற்றுச்சூழல் விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்தும் மக்கள் நிறைந்த நகரம். இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டடங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை உருவாக்குபவர்கள். அதற்காக, வித்தியாசமான, அழகழகான வடிவங்களில் கட்டடங்களை கட்டுவார்கள். இங்கே, குன்ஸ்டாஃப் பசாஜ் (Kunsthofpassage) என்ற இடத்தில் உள்ள ஒரு கட்டடம், அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்தக் கட்டடத்தில் மழைநீர்ச் சேகரிப்புக்காகப் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள்தான் காரணம். கட்டடத்தின் உச்சியிலிருந்து தரை வரையில் புனல் வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய குழாய்களைப் பதித்துள்ளார்கள். மழை பெய்யும்போது, கட்டடத்தின் மேலிருந்து அந்தப் புனல் குழாய்கள் வழியே நீர் வருவது, இனிமையான இசையைக் கேட்பது போல உள்ளது. ‘இசை மழைக் கட்டடம்’ என்றே இந்தக் கட்டடத்தை குறிப்பிடுகிறார்கள். அதன் வீடியோவும் உள்ளன. https://www.youtube.com/watch?v=JQZgq_lrwQ4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு