Published:Updated:

ஒரு நாடு ஒரு செய்தி - ஓசானியா

இந்தியர்கள் மிக அதிகம் வசிக்கும் தீவு நாடுகளில் ஒன்று ஃபிஜி.

பிரீமியம் ஸ்டோரி
ஒரு நாடு ஒரு செய்தி - ஓசானியா

குட்டி நாடு... பெரிய மனிதர்கள்!

சானியா நாடுகளில் மிகமிகச் சிறிய நாடு நவூறு (Nauru). இந்நாட்டின் மொத்த பரப்பளவே 21 கிலோமீட்டர்தான். ‘நவூறு’ என்ற சொல்லுக்கு, ‘நான் கடற்கரைக்குப் போகிறேன்’ என்று பொருள். இந்தச் சொல்லின்படி காலையில் எழுந்து கடற்கரைக்கு ஒரு வாக்கிங் கிளம்பினால் போதும். உங்களின் நடையின் வேகத்தைப் பொறுத்து, முழு நாட்டையும் குறிப்பிட்ட நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். வாட்டிகனுக்கு அடுத்து உலகின் மக்கள்தொகை குறைந்த நாடு. சென்ற ஆண்டின் கணக்கின்படி, மொத்த மக்கள்தொகை 11,200. ஆனால், 12 இனத்தினர் உள்ளனர். இதைக் குறிப்பிடும் வகையில் நாட்டின் தேசியக்கொடியில் 12 நட்சத்திரங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். சதவிதத்தின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) குறிப்பிடும் உடற்பருமன் அதிகமானோர் நாடுகளில் ஒன்று. 70 சதவிகிதத்தினர் பருமனாக உள்ளனர்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஓசானியா

இந்தியர்கள் தீவு!

ந்தியர்கள் மிக அதிகம் வசிக்கும் தீவு நாடுகளில் ஒன்று ஃபிஜி. காட்டுவளம், கனிமவளம், மீன் வளம் எனப் பொருளாதாரத்தில் அதிகம் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்று. போதாதற்குச் சுற்றுலாத்துறையாலும், சர்க்கரை ஏற்றுமதியாலும் முக்கிய வருமானத்தை ஈட்டுகிறது. அங்கே கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களில் உள்ள ஓவியங்கள் மூலம் கி.மு 3500–1000 ஆண்டுகளில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது. இங்குள்ள விட்டி லெவ் (Viti Levu) மற்றும் வனுவா லெவ் (Vanua Levu) என்கிற இரண்டு தீவுகளில்தான் நாட்டின் 87 சதவிகித மக்கள் வசிக்கின்றனர். 19ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷாரால் தொழில் செய்ய இந்தியர்கள் வரவைக்கப்பட்டார்கள். அப்படியாக, மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பிஜி இந்தியர்கள் இங்கே வசிக்கிறார்கள். இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் பேசுபவர்களை இங்கே காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஓசானியா

அழகிய தீவு!

சானியா (Oceania) என்பது, பசிபிக் பெருங்கடலையும் அதைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலப் பகுதிகளான தீவுகளையும் குறிப்பிடுவது. ஓசியானியா என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர், பிரெஞ்சு நாட்டுப் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில். இன்று கண்டங்களில் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தீவு நாடுகளில் ஒன்று, சமோவா (Samoa). 200 வகையான பவளத்திட்டுகளும் 900 வகையான மீன் இனங்களும் காணப்படுகின்றன. பசிபிக் பிராந்தியத்திலேயே மிகமிக அழகான தீவு என வர்ணிக்கிறார்கள். சமோவா மக்கள், பச்சைக்குத்துதலை 100 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வீரத்தை நினைவுப்படுத்தும் விதமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். டிரெசர் ஐலாண்டு (Treasure Island) என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன், தனக்கு மிகவும் பிடித்த தீவு நாடாக இதைக் குறிப்பிடுகிறார்.

ஒரு நாடு ஒரு செய்தி - ஓசானியா

சுற்றுலா சொர்க்கம்!

ஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள நகரம், கோல்ட் கோஸ்ட் (Gold Coast). உலகச் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரிகளில் ஒன்று. இந்தக் கடற்கரை நகரத்தில் அலைச்சறுக்கு விளையாட்டு, கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் பயணம், இரவுக் கேளிக்கைகள் எல்லாம் உண்டு. ஆண்டுக்கு 11 மில்லியன் டாலர் வருமானம் இந்த நகரம் மூலம் கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவின் 6 பெரிய நகரங்களில் ஒன்று. 1770ஆம் ஆண்டு கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் முதன்முதலில் இங்கே வந்திறங்கிய ஐரோப்பியர். கோல்டு கோஸ்ட் என்ற பெயர் எப்படி உருவானது என்பதற்கான சரியான விளக்கம் இல்லை. 1958ஆம் ஆண்டில், சவுத்போர்டு மற்றும் கூலங்கட்டா ஆகிய இடங்களை உள்ளடக்கி கோல்டு கோஸ்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான Dreamworld இங்குதான் உள்ளது. குழந்தைகளின் உற்சாக உலகம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு