Published:Updated:

ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா

தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடு பிரேசில். பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய நாடு. மக்கள்தொகை 21 கோடியைத் தொட்டுவிட்டது.

பிரீமியம் ஸ்டோரி
ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா
ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா

நிதானமான காற்று!

‘அர்ஜிடினம்’ என்கிற லத்தீன் சொல்லுக்கு, ‘வெள்ளி’ என்று பொருள். இதிலிருந்து வந்ததே அர்ஜென்டினா. மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் வெள்ளி நிறைந்த நாடு இது. தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மற்றும் உலகின் எட்டாவது பெரிய நாடு. ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ள நாடும் இதுவே. 22 மாகாணங்களையும் ஒரு தன்னாட்சி நகரத்தையும் உள்ளடக்கிய நாடு. அர்ஜென்டினாவின் தலைநகரான ப்யூனஸ் அயர்ஸ் (Buenos Aires), அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம். உலகின் மிகப்பெரிய நகரங்களில் இதுவும் ஒன்று. ‘ப்யூனஸ் அயர்ஸ்’ என்றால், ‘நிதானமான காற்று’ என்று பொருள். இந்த நகரத்தில் உள்ள எல் அடென்நியோ கிராண்டு பெல்ன்டிட் (El Ateneo Grand Splendid) என்ற புத்தகக் கடை, உலகின் மிக அழகான புத்தகக் கடை என்று பெயர் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஒரு தியேட்டராக இருந்து, புத்தகம் மற்றும் இசைக் கடையாக மாற்றப்பட்டது.

ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா
ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா
ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா

கால்பந்து தேசம்!

தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடு பிரேசில். பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய நாடு. மக்கள்தொகை 21 கோடியைத் தொட்டுவிட்டது. காபி உற்பத்தியில் உலக அளவில் முதலிடம், புதிய உலக அதிசயத்தில் இடம்பெற்றுள்ள இயேசு சிலை, கால்பந்துப் போட்டியில் 5 முறை உலகக் கோப்பையை வென்றது என்று பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தமான நாடு. இந்த நாட்டின் முதல் பெண் அதிபராகத் தேர்வானவர், டில்மா வானா ரூசெஃப் (Dilma Vana Rousseff). பல்கேரியாவிலிருந்து புலம்பெயர்ந்த பள்ளி ஆசிரியரின் மகளான இவர், சிறந்த பொருளாதார நிபுணர். அரசியலில் நுழைந்து பல்வேறு பதவிகளைக் கடந்து பிரேசிலின் அதிபரானார். ஆனால், நாட்டு நிதியை முறைகேடாக கையாண்ட குற்றச்சாட்டில் சிக்கி, 2016ஆம் ஆண்டில் பதவியை இழந்தார். இப்போது, ஜெர் போல்சோனரோ (Jair Bolsonaro) என்பவர் அதிபராக உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா
ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா
ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா

கவிதைப் போராளி!

‌‌தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் சிலி (Chile), வித்தியாசமான புவியியல் பரப்பளவில் அமைந்திருக்கும் நாடு. உலகின் நீளமான மற்றும் குறுகிய நாடு என்பார்கள். அதாவது, தெற்கு-வடக்காக 4,630 கிலோமீட்டராக நீண்டிருக்கும். கிழக்கு-மேற்காக 430 கிலோமீட்டரில் மிகக்குறுகி காணப்படும். உலகிலேயே சிலியில்தான் நைட்ரேட் மிகுதியாக கிடைகிறது. உலகின் தாமிர வளங்களில் பாதிக்கு மேல் சிலியில்தான் உள்ளது என்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா (Pablo Neruda) பிறந்த நாடு இது. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞரான இவர், சமூகப் போராளியாகவும் தன் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். The skin of the earth is same everywhere (பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றுதான்) என்பது இவரது புகழ்பெற்ற கவிதை வரிகள். 1971ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்.

ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா
ஒரு நாடு ஒரு செய்தி - தென் அமெரிக்கா

பல்லுயிர்களின் பூமி!

தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு, கொலம்பியா. அமேசான் மழைக்காடுகள், ஆண்டீஸ் மலைத்தொடர், பசிபிக் பெருங்கடல் என்று தன்னைச் சுற்றி பல்வேறு இயற்கை வளங்களைப் பெற்றுள்ள நாடு. பெரும்பல்வகைமை நாடுகள் (Megadiverse Countries) என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதாவது, நிலம், நீர், மலை எனப் பூமியின் பல்வேறு தகவலைப்புகளில் பல்வகை உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதி. பல வகை மொழியினரும் இருப்பதால், உலகின் பண்பாட்டு மரபுமிக்க நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. நம் ஊர் கிராமங்களைப் போன்று வண்ணமயமான சுவர்களுடன் வீடுகள் இருக்கும். கொலம்பியாவின் தலைநகரம் பொகோடா (Bogoto). யுனேஸ்கோ அமைப்பினால் 2007ஆம் ஆண்டில், உலகப் புத்தகத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. கொலம்பியா தேசிய நூலகம் மற்றும் பிப்லியோடெக்கா லூயிஸ் ஏஞ்சல் ஆராங்கோ நூலகம் என இரண்டு மிகப்பெரிய பொதுநூலகங்கள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு