Published:Updated:

சிவகங்கை: `நோட்ல ஸ்பேஸ் பத்தல!’ - ஊரடங்கில் வீட்டின் சுவரை அலங்கரித்த மாணவியின் ஓவியங்கள்

ஓவியம்

இந்த ஊரடங்கு லீவில்தான் அவளுக்கு நிறைய டைம் கிடைச்சுருக்கு. அவளின் திறமையை மேம்படுத்தணும்னு ஆசைப்படுறேன். அவளுக்கு விரும்பம் இருந்தா ப்ளஸ் டூ முடிச்சதும் ஓவியக் கல்லூரியில்கூட சேர்த்துவிட தயாரா இருக்கேன்.

சிவகங்கை: `நோட்ல ஸ்பேஸ் பத்தல!’ - ஊரடங்கில் வீட்டின் சுவரை அலங்கரித்த மாணவியின் ஓவியங்கள்

இந்த ஊரடங்கு லீவில்தான் அவளுக்கு நிறைய டைம் கிடைச்சுருக்கு. அவளின் திறமையை மேம்படுத்தணும்னு ஆசைப்படுறேன். அவளுக்கு விரும்பம் இருந்தா ப்ளஸ் டூ முடிச்சதும் ஓவியக் கல்லூரியில்கூட சேர்த்துவிட தயாரா இருக்கேன்.

Published:Updated:
ஓவியம்

கொரோனா ஊரடங்கு தளர்வுடன் தற்போதும் தொடர்கிறது. விடுமுறைக்கு ஆசைப்படும் மாணவர்கள்கூட போதும் போதும் என வெறுக்கும் அளவுக்கு நீண்ட நெடிய பயணமாக பள்ளி விடுமுறைகளும் இருந்து வருகின்றன. வெளியில் சென்று விளையாட முடியாத குழந்தைகள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் கேம்களில் பொழுதுகளைக் கழிக்கின்றனர்.

ஊரங்கு ஓவியம்
ஊரங்கு ஓவியம்

சில குழந்தைகள் புத்தக வாசிப்பு, மாடித் தோட்டம் அமைத்தல், பொம்மைகள் செய்தல் என்று பயனுள்ள முறையில் பொழுதுகளைக் கழிக்கின்றனர். இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராகவி என்ற பள்ளி மாணவி தனது வீடு முழுவதும் வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டி பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீராகவி, ``எனக்கு சின்ன வயசில் இருந்து டிராயிங்னா ரெம்பப் பிடிக்கும். குட்டிக் குட்டியா வரைஞ்சு வச்சுருக்கே. ஆனா, படிப்புல அதிக கவனம் செலுத்துவதால் எனக்கு டைம் நிறைய கிடைக்காது. இப்ப நான், டென்த் முடிச்சுட்டு ப்ளஸ் ஒன் போறேன். லாக்டௌன்ல ரெம்ப போர் அடிச்சதால டிராயிங் பண்ணலாமேனு கொஞ்சம் வரைஞ்ஜேன். ஆனா எனக்கு நோட்ல ஸ்பேஸ்... பத்தல. வீட்டு சுவத்துல வரைஞ்சு பாப்போமானு அப்பாகிட்ட ஐடியா கேட்டேன். "ஓ... எஸ் தாராளமா வரையலாம்னு" சொன்னாங்க.

ஸ்ரீராகவி
ஸ்ரீராகவி

அப்பா இப்பிடியெல்லாம் சொல்லுவாங்கனு எதிர்பாக்கல. அதுக்கப்புறம் எனக்கு அப்பா பிரஸ், வாட்டர்கலர், ஆயில் பெயின்ட்டுனு கேக்காமயே நிறைய வாங்கிக் கொடுத்தாங்க. நானும் இப்ப நிறைய வரைஞ்சுட்டேன். என் பெயின்டிங்க அப்பா அவங்க ஃபேஸ்புக்ல போட்டாங்க. அதுக்கு செம ரெஸ்பான்ஸ். இதனால எனக்கு நிறைய பாராட்டு மழை குவியுது. என் ஃபிரெண்ட்ஸ்கூட இப்ப வரைய ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகவியின் அப்பா கணேஷன், " நான் கூட்டுறவு வங்கி மேலாளராக இருக்கேன். என் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியை. என் பொண்ணு ராகவி குட்டீஸா இருக்கும்போதே நிறையா சுவத்தில் வரைவாங்க. அவளின் கிருக்கல்ஸ்தான் இப்ப அழகிய ஓவியமா மாறியிருக்கு. நான் சின்ன வயசில் பேப்பரில் எண்ணெய் தேய்ச்சு வரைஞ்ச நினைவுகள் கூட ஞாபகப்படுத்துது.

ஊரடங்கு ஓவியம்
ஊரடங்கு ஓவியம்

என் பொண்ணுக்கு இவ்ளோ திறமை இருக்கும்னு நினைக்கல. நல்லா வரையுறாங்க. இந்த ஊரடங்கு லீவில்தான் அவளுக்கு நிறைய டைம் கிடைச்சுருக்கு. அவளின் திறமையை மேம்படுத்தணும்னு ஆசைப்படுறேன். அவளுக்கு விரும்பம் இருந்தா ப்ளஸ் டூ முடிச்சதும் ஓவியக் கல்லூரியில்கூட சேர்த்து விடத் தயாரா இருக்கேன்" என்று மகளின் ஓவிங்களைப் பார்த்து புன்னகைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism