பிரீமியம் ஸ்டோரி

வீட்டிலிருக்கும் பழைய பாட்டில்களைக்கொண்டு உங்கள் வீட்டை ரம்மியமாக்க பாட்டிலில் பெயின்டிங் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த தரன்ஷியா.

தரன்ஷியா
தரன்ஷியா
பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

தேவையானவை

பாட்டில் - 1, அக்ரலிக் பெயின்ட் - தேவையான நிறங்களில், பிரஷ் - 2 (0, 20 நம்பர்களில்), பேப்பர், பென்சில், துணி.

ஸ்டெப் - 1

பாட்டிலில் நீங்கள் வரையப்போகும் டிசைனை முதலில் பேப்பரில் வரைந்து பார்த்துக்கொள்ளவும்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 2

பாட்டிலின் வெளிப்புறம் ஒட்டப் பட்டிருக்கும் ஸ்டிக்கர் அல்லது பேப்பரை எடுக்க பாட்டிலை ஒரு நாள் முழுக்க தண்ணீரில் ஊற வைத்து, பேப்பரைத் தனியே எடுக்கவும்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 3

நீங்கள் என்ன படம் வரையப் போகிறீர்களோ அதற்கு தகுந்த பேக்ரவுண்டு நிறத்தை 20-ம் நம்பர் பிரஷ் பயன்படுத்தி பாட்டிலில் பெயின்ட் செய்து 20 நிமிடங்கள் காயவிடவும்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 4

நீங்கள் வரையப்போகும் உருவத்தின் அவுட்லைனை முதலில் பென்சிலால் பாட்டிலில் வரையவும்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 5

நீங்கள் வரைந்துள்ள படத்துக்கேற்ப அதன் உட்புறம் பெயின்ட் செய்து சிறிது நேரம் காயவிடவும்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 6

நீங்கள் டிசைன் செய்துள்ள இடம் தவிர்த்து மற்ற இடங்களை நீங்கள் விரும்பும் நிறத்தால் ஷேட் செய்யுங்கள்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 7

`0' நம்பர் பிரஷ் அல்லது மார்க்கர் கொண்டு நீங்கள் வரைந்துள்ள டிசைனுக்கு அவுட்லைன் வரையவும்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 8

வெள்ளைநிற பெயின்ட்டால் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து பூக்கள், நட்சத்திரங்கள் போல் டிசைன் செய்துகொள்ளவும்.

பாட்டில் பெயின்டிங் - தரன்ஷியா

ஸ்டெப் - 9

பாட்டிலில் அடித்துள்ள பெயின்ட் நன்றாக உலர்ந்ததும் அதன்மீது வார்னிஷ் அடித்துக் காயவைத்தால், பெயின்ட் வெளுக்காமல் இருக்கும். விருப்பப்படுபவர்கள் பாட்டிலின் வாய்ப்பகுதியில் ஃபெவிக்கால் தடவி கயிற்றைச் சுற்றி அழகுபடுத்தலாம்.

டிப்ஸ்:

பேக்ரவுண்ட் ஃபினிஷிங் சரியாக இல்லை என்று நினைப்பவர்கள். பாட்டிலின் வாய்ப்பகுதி வழியே பாட்டிலுக்குள் பெயின்டை ஊற்றி அதை பாட்டில் முழுவதும் சீராக பரவச்செய்து நீங்கள் விரும்பும் டிசைனை மட்டும்கூட வெளியில் வரைந்துகொள்ளலாம்.

நேரடியாக பாட்டிலில் டிசைன் வரைய முடியவில்லை என்பவர்கள், நீங்கள் விரும்பும் டிசைனை பேப்பரில் வரைந்து பாட்டிலுக்குள் வைத்து விட்டு, அதன் அச்சிலேயே வெளியிலிருந்து படம் வரைந்து கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு