பொது அறிவு
Published:Updated:

ஸ்டார் ஸ்மால் ஸ்டார்ஸ்!

தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
தோனி

சினிமா, விளையாட்டு, அரசியல் எனக் கலக்கும் பிரபலங்களின் வீட்டு வாரிசுகள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஒரு ஜாலி ரவுண்ட்-அப்...

ஸிவா தோனி

தோனி
தோனி

பிஎல் சீஸன்போது, சிஎஸ்கே டிரெண்டிங் திருவிழாவின் க்யூட் வைரல், தோனியின் மகள் ஸிவா. ஸ்டேடியம், ஏர்போர்ட், ஹோட்டல் என எங்கே சென்றாலும், அங்கிருந்து ஸிவாவின் குறும்பு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிடுவார் தோனியின் மனைவி சாக் ஷி. ஸிவாவுக்காகத் தனியாக இன்ஸ்டா பக்கமே இருக்கிறது. அதில்1.2 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இப்போது 4 வயதாகும் ஸிவா, 2 வருடங்களுக்கு முன்பிருந்தே ப்ரீ ஸ்கூல் போக ஆரம்பித்துவிட்டார்.

வேதாந்த் மாதவன்

வேதாந்த் மாதவன்
வேதாந்த் மாதவன்

டிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்துவருகிறார். சமீபத்தில், தேசிய நீச்சல் போட்டியின் ஜூனியர் பிரிவில், 4 தங்கம் மற்றும் 1 வெள்ளி வென்று அசத்தியிருக்கிறார். தேசிய அளவில், தனிநபர் பிரிவில் வேதாந்த்தின் முதல் பதக்கம் இது. ஜாம்பவான் மைக்கேல் ஃபெல்ப்ஸ்தான் இவரின் இன்ஸ்பிரேஷன். இந்த ஆண்டு தொடக்கத்தில், அவரை நேரில் சந்தித்து கைகுலுக்கியிருக்கிறார் ,வேதாந்த்.

அர்ஜூன் சச்சின்

அர்ஜூன் சச்சின்
அர்ஜூன் சச்சின்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் மகன், அர்ஜூன். இடதுகை பேட்ஸ்மேன், இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஆர்ஜூன், கடந்த வருடம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த வருடம் மே மாதம், மும்பையின் உள்ளூர் T20 தொடரில், ‘ஆகாஷ் டைகர்ஸ்’ அணிக்காக 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆயினும், இந்தத் தொடரில் சோபிக்கவில்லை. அர்ஜூன் இடம்பெற்றிருந்த அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது.

அமீன் ரஹ்மான்

அமீன் ரஹ்மான்
அமீன் ரஹ்மான்

சை ஆளுமை ஏ.ஆர். ரஹ்மானின் மகன், அமீன். ‘ஓகே கண்மணி’ படத்தில், ‘மௌலானா’ என்ற பாடல் மூலம் இதயங்களை வருடினார். இப்போது, தந்தை இசையில் ‘சகோ’ என்னும் பாடலைப், பாடி நடித்திருக்கிறார். நட்பின் பெருமையைச் சொல்வதுதான் இந்தப் பாடலின் தீம். இசைப் புயலின் வீட்டிலிருந்து வந்திருக்கும் இந்த இளம்புயலிடம், வருங்காலத்தில் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

ஆர்யன் ஷாருக்கான்

ஆர்யன் ஷாருக்கான்
ஆர்யன் ஷாருக்கான்

ர்யன் கான், சுஹானா, ஆப்ராம் என ஷாருக்கானுக்கு 3 வாரிசுகள். ‘லயன் கிங்’ படத்தின் இந்தி பதிப்பில் அப்பா ஷாருக்கும் மகன் ஆர்யனும் சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். சுஹானாவும் சமீபத்தில் தன் படிப்பை முடித்துவிட்டார். பாலிவுட்டில் கால்பதிக்க ஆர்வமாகவே இருக்கிறார். ஆப்ராம் வயது 6. இந்த 3 பேரும் இணைந்து சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா போட்டோவுக்கு செம லைக்ஸ்.

சூர்யா விஜய் சேதுபதி

சூர்யா விஜய் சேதுபதி
சூர்யா விஜய் சேதுபதி

‘நானும் ரௌடிதான்’ படத்திலேயே சின்ன வயது விஜய் சேதுபதியாக வந்தவர், மகன் சூர்யா. ‘சிந்துபாத்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். படம் வெளிவருவதற்கு முன்பே, விஜய் சேதுபதி மற்றும் சூர்யாவின் ஸ்டன்ட் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தது படக் குழு. செம ஜாலியான அந்த வீடியோ, செம்ம வைரலானது.