பொது அறிவு
Published:Updated:

மெத்... மெத் ஆடு!

மெத்... மெத் ஆடு
பிரீமியம் ஸ்டோரி
News
மெத்... மெத் ஆடு

உங்கள் கைவண்ணத்தில் மெத்... மெத் ஆடு வந்தாச்சு!

ஹாய் சுட்டீஸ்... பேப்பர் கப் பயன்படுத்தி அழகான ஆடு செய்ய கற்றுத்தருகிறார், சென்னையில் உள்ள ‘சாய் கிரியேஷன்’ உரிமையாளர், சோபனா.

தேவையானவை : பேப்பர் கப் - 1, மர கிளிப்கள் - 4, பஞ்சு உருண்டைகள் - தேவையான அளவு (கால் கிலோ பஞ்சு வாங்கி, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்), ஸ்கெட்ச்-1 (கறுப்பு), ஃபெவிக்கால், கூக்ளி ஐ, பேப்பர், கத்தரிக்கோல்.

மெத்... மெத் ஆடு!

செய்முறை :

ஸ்டெப் 1: மர கிளிப்களின் கீழ்ப்பகுதியில், படத்தில் காட்டியபடி கறுப்பு நிற ஸ்கெட்சால் வண்ணம் தீட்டவும்.

ஸ்டெப் 2: பேப்பர் கப்பின் வாய்ப் பகுதியின் 4 மூளைகளிலும் கிளிப் பொருத்தவும். ( ஆட்டின் கால்கள் போன்ற தோற்றம் வரும்)

ஸ்டெப் 3: பேப்பர் கப் முழுவதும் ஃபெவிக்கால் தடவவும்.

மெத்... மெத் ஆடு!

ஸ்டெப் 4: பின்னர், பஞ்சு உருண்டைகளை எடுத்து ஒட்டவும். 5 நிமிடங்கள் காயவிடவும். ஆட்டின் உடல் பகுதி தயார்.

ஸ்டெப் 5: அடுத்து, நீளவாக்கில் பஞ்சினை உருட்டிக்கொள்ளவும். இதை, தலைப் பகுதியாக ஒட்டவும்.

ஸ்டெப் 6: வெள்ளை பேப்பரில் ஆட்டின் காதுகள் வரைந்து, வெட்டி எடுத்து, கறுப்பு வண்ணம் தீட்டி, காதுகளாக ஒட்டவும்.

ஸ்டெப் 7: தலைப்பகுதியில் கூக்ளி ஐ ஒட்டி, சிறிது நேரம் காயவிடவும்.