படங்கள்: உமாபதி

இந்த லாக் டெளன் நேரத்தில் உங்களின் நேரத்தைப் பயனுள்ளதாக்கும் வகையில் தேங்காய் நாரில் குதிரை செய்யக் கற்றுத்தருகிறார் நான்காம் வகுப்பு படிக்கும் கிஷாலி.

தேவை: தேங்காய் நார் - கால் கிலோ (தனித்தனி இழைகளாகப் பிரித்தது), மரத்தூள் - ஒரு கப் (மரம் இழைக்கும் கடைகளில் கிடைக்கும்), பிளாஸ்டிக் கப் - 1, ஃபெவிக்கால், கத்தரி, கத்தி, கயிறு - 32 செ.மீ நீளம்.

ஸ்டெப் 1: 100 மில்லி லிட்டர் தண்ணீரில் 50 மில்லி லிட்டர் ஃபெவிக்காலை ஊற்றி ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

ஸ்டெப் 2: தேங்காய் நாரை ஃபெவிக்கால் கலந்த தண்ணீரில் முக்கியெடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3: முக்கியெடுத்த நாரைப் படத்தில் காட்டியுள்ளபடி உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

ஸ்டெப் 4 குதிரையின் கால்களுக்குக் கயிற்றை நான்கு துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு துண்டும் 8 செ.மீ நீளம் இருப்பது அவசியம். அதை ஃபெவிக்கால் கலந்த நீரில் முக்கியெடுத்து லேசாக வளைத்துவிட்டு 15 நிமிடங்கள் உலரவிடவும். அதேபோன்று தேங்காய் நார் உருண்டைகள் சிறியதும் பெரியதுமாக ஏழு உருண்டைகள் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 5: ஒரு கப் மரத்தூளுடன், ஐந்து டீஸ்பூன் ஃபெவிக்கால் ஊற்றி பசையின் பதம் வருவது போன்று ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

ஸ்டெப் 6: உருட்டிக் காயவைத்துள்ள தேங்காய் நார் உருண்டைகளில், மூன்று பெரிய உருண்டைகளை எடுத்து, மரத்தூள் பசை உதவியுடன் ஒன்றோடு ஒன்றாகப் பக்கவாட்டில் ஒட்டி உலரவிடவும் (இது குதிரையின் உடல் பகுதி).

ஸ்டெப் 7: கால் பகுதிக்கு வெட்டிவைத்துள்ள கயிற்றின் மேற்பகுதியில் சிறிது தேங்காய் உருண்டைகளை ஒட்டிக்கொள்ளவும் (பார்ப்பதற்குக் குச்சி மிட்டாய் போன்று இருக்க வேண்டும்). அதேபோல் தேங்காய் நாரை ஃபெவிக்காலில் முக்கியெடுத்து குதிரையின் வால், காது, கழுத்து பகுதிகளைப் படத்தில் காட்டியுள்ளபடி தயார் செய்து 10 நிமிடங்கள் உலரவிடவும்.

ஸ்டெப் 8: உடல் பகுதியுடன் தலை, கழுத்து பகுதிகளை ஒட்டி 10 நிமிடங்கள் உலரவிடவும்.

ஸ்டெப் 9: உடல் பகுதியுடன் சேர்த்து நான்கு புறமும் கால்களை ஒட்டினால் அழகான தேங்காய் நார் குதிரை தயார்.