Published:Updated:

பல்லாங்குழி, பரமபதம் முதல் சமையல், க்ளீனிங் கற்றுத்தருவதுவரை... குழந்தைகளின் லீவ் நாள்களுக்கான டிப்ஸ்!

இந்தக் காலத்தில் ஐந்து வயது வாண்டுகள் முதல் 50 வயது முதியவர்கள் வரை எல்லோருக்கும் மொபைல் போன்கள்தான் மூன்றாவது கை. அந்த பிசி போனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, வீட்டுக்குள்ளேயே விளையாட சுவாரஸ்ய கேம்ஸ் பல குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழந்தைகளின் சந்தோஷமே விளையாட்டுதான். ஆனா, உண்மையான விளையாட்டெல்லாம் 90'ஸ் கிட்ஸோடு ஓவர். இந்தக் காலத்து குட்டீஸ்க்கு பப்ஜி, ETA போன்ற விர்ச்சுவல் உலக விளையாட்டைத் தாண்டி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குழந்தைகளோடு நேரம் செலவிட்டு விளையாடுவதற்குப் பெற்றோர்களுக்கும் நேரம் கிடைக்கிறதில்லை. ஆனால், கொரோனாவின் தாக்கத்தினால் தற்போது பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் விடுப்பு கிடைத்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கிடைத்திருக்கும் இந்தக் காலகட்டத்தைக் குடும்பத்தோடு செலவிடலாமே! அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்காகக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கலாமே! குழந்தைகளோடு இணைந்து செலவிடும் இந்த நாள்கள் நிச்சயம் அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமையும் என்றே சொல்லலாம்.

இந்தக் காலத்தில் ஐந்து வயது வாண்டுகள் முதல் 50 வயது முதியவர்கள்வரை எல்லோருக்கும் மொபைல் போன்கள்தான் மூன்றாவது கை. அந்த பிசி போனுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, வீட்டுக்குள்ளேயே விளையாடும் சில சுவாரஸ்ய கேம்ஸ் மூலம் குழந்தைகளுக்குப் பல அறிவு சார்ந்த விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்.

செஸ்:
செஸ்
செஸ்

இந்த விளையாட்டைப் பற்றிச் சொல்லணும்னு அவசியமில்லை. 'செஸ் விளையாடாத் தெரியும்'னு ஒருத்தர் சொன்னாலே போதும், 'புத்திசாலி'ங்குற பிம்பம் எல்லோருடைய மனசுலயும் தோன்றும். எதிர்முனையில் இருப்பவர்களுடைய பலம், பலவீனம் பற்றி தெரிஞ்சு, அவர்களுக்கு ஏற்றபடி தன்னுடைய படை வீரர்களைக் களத்தில் இறக்கி, தன்னுடைய அரசவையைப் பத்திரமாக வைத்துக்கொள்ளப் போராடும் மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு சதுரங்கம் எனப்படும் செஸ். இது கவனச் சிதறலைக் கட்டுப்படுத்தி, planning, problem solving உள்ளிட்ட திறன்களையும் மேம்படுத்துகிறது. இரண்டு பக்க மூளையையும் வேலை செய்யவைக்கும் இந்தத் தந்திர விளையாட்டை உங்கள் குழந்தையோடு சேர்ந்து விளையாடி மகிழுங்கள்.

`கொரோனா'வால் மட்டன் பிரியாணி பயமா..?! பலாக்காய் பிரியாணி இருக்கே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரம் போர்டு:
கேரம் போர்டு:
கேரம் போர்டு:

ஒரு காலகட்டத்துல கேரம் போர்டு இல்லாத வீடுகளைப் பார்ப்பதே அரிது. 'நான்கு பேர்' ஆள் சேர்ப்பதில் இருக்கும் கிக்கே தனிதான். ஆனால், இப்போதோ ஆன்லைனில் சிங்கிள் ஆளாக அமர்ந்து காயின்களை பாக்கெட் செய்து விளையாடுகின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு விளையாடும்போது கிடைக்கிற சந்தோஷம் நிச்சயம் ஆன்லைனில் விளையாடும்போது கிடைக்காது. குடும்பத்தோடு ஒன்றாக இணைந்து விளையாடும்போது, சந்தோஷம், போட்டி, ஃபன் போன்றவை நூறு சதவிகிதம் கியாரன்டி. மேலும், இது problem solving skill மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. பாயின்ட்ஸ் அடிப்படையில் விளையாடும்போது, எண்ணிக்கை, கண்களும் கைகளுக்குமான ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட இந்த கேரம் கேம் உதவுகிறது.

பல்லாங்குழி:
பல்லாங்குழி
பல்லாங்குழி

நாம் மறந்த பாரம்பர்ய விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று பல்லாங்குழி. பலர் 'பல்லாங்குழி' என்ற வார்த்தையைச் சில பாடல்களில் மட்டுமே கேட்டிருப்பார்கள். ஆனால், இந்த விளையாட்டு பல்வேறு விதமான நன்மைகளைக் கொண்டது. 14 குழிகளில், காய்களை நிரப்பி விளையாடும் இன்டெரெஸ்ட்டிங் கேம். எதிரில் இருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை முன்கூட்டியே அறிந்து, அவற்றை நினைவில் வைத்து, தன்னுடைய தனிப்பட்ட யுக்தியைப் பயன்படுத்தி எதிரியை வீழ்த்துவதே இதிலிருக்கும் சுவாரஸ்யம். படிப்பில் கவனம் இல்லையென குழந்தைகளை நினைத்து வருத்தப்படுவதை விட்டுவிட்டு தினமும் ஒருமணிநேரம் அவர்களோடு இணைந்து பல்லாங்குழி விளையாடுங்கள். நிச்சயம் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

பரமபதம்:
பரமபதம்
பரமபதம்

முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தைச் சார்ந்து விளையாடப்படும் விளையாட்டு இது. ஆனால், இதனுள் சுவாரஸ்யங்கள் பல. பாம்பு, ஏணி, எண்கள் என பரமபதம் போர்டே ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும். ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையின் அங்கம் என்பதை மிகவும் எளிமையாய் விளக்கும் அருமையான விளையாட்டு இது. முன்னேற்றப் பாதையில் ஏராளமான தடைகள் வரும். ஆனால், அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சி வேண்டும் என ஆழமாக வலியுறுத்தும் கேம் பரமபதம். மனவலிமையை மேம்படுத்தும் இந்த விளையாட்டை உங்கள் குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள். நமக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.

`நீங்கள் இல்லாமல் என்ன செய்வது, பிரான்சிஸ்?!'- கொரோனாவால் விளையாட்டு உலகில் முதல் இழப்பு
பிசினஸ்:
பிசினஸ்
பிசினஸ்

'ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி'னு சும்மா வசனம் மட்டுமே பேசிச் சுற்றிக்கொண்டிருப்பவர்கள்தான் இங்கு அதிகம். உண்மையில் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற ரிஸ்க் எடுப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதற்கு மிகப் பெரிய காரணம், பயம். ஆனால், அந்த பயத்தைப் போக்கி, வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதை விளையாட்டின் மூலம் அழகாக விளக்கும் அறிவுசார்ந்த விளையாட்டுகள்தான் பிசினஸ் கேம்ஸ். வீடு கட்டுவது, கடன் வாங்குவது, அதை அடைப்பது, பயணம் செய்வது என நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் மிகப் பெரிய விஷயங்களை ஒரு சிறிய போர்டில் அடக்கி அத்தனையும் சொல்லிக்கொடுக்கிறது இந்த பிசினஸ் கேம். உண்மையில் இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவசியமான விளையாட்டு.

வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மட்டும்தான் இருக்கின்றனவா. உடலுக்கு பலம் சேர்க்கும் வகையில் எந்த கேமும் இல்லையா? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அந்த வரிசையில் உடலுக்கு வலுசேர்க்கும் சில விளையாட்டுகளை இப்போது பார்க்கலாம்.

டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸ்
Vivek Das

கை கண்கள் ஒருங்கிணைந்து கவனத்தை அதிகரிக்கச் செய்யும் சுறுசுறுப்பான விளையாட்டு இது. கண்ணிமைக்கும் நேரத்தில் டேபிள் மீது தாவும் பந்தினைத் துரத்தி அடிப்பதில் இருக்கும் கிக், எத்தனை பேரை பப்ஜியில் சுட்டுத் தள்ளினாலும் கிடைக்காது. உடல் தசைகளை மேம்படுத்தி அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் மற்றும் மனவலிமையை அதிகரிக்கச் செய்யும் தன்மை டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இருக்கிறது. ட்ரை பண்ணிதான் பாருங்களேன். உங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் விளையாடுங்கள்.

ஸ்கிப்பிங்:
ஸ்கிப்பிங்
ஸ்கிப்பிங்

எவ்வளவு நீண்ட வேலைகள் இருந்தாலும், தினமும் முழுமையான 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதற்கு ஒதுக்கினால், நிச்சயம் உடல்நலத்திற்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இது, கால்களை வலுப்படுத்தி இதயத்தைச் சீராக இயங்க வைக்க உதவுகிறது. தலை முதல் பாதம்வரை அத்தனை உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட்டு, நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்கவைக்கிறது. இன்னும் எதுக்கு வெயிட்டிங்? யாரு அதிகமா ஸ்கிப் பண்ணுறாங்கனு போட்டி போட்டுட்டு ஸ்கிப்பிங் விளையாட வேண்டியதுதானே!

மியூசிகல் சேர்:
மியூசிகல் சேர்
மியூசிகல் சேர்

இசையோடு சேர்ந்த விளையாட்டு.. யாருக்குத்தான் பிடிக்காது. குடும்பத்தோடு இணைந்து விளையாடும் விளையாட்டுகள் பல இருந்தாலும், மியூசிகல் சேர் விளையாட்டில் கிடைக்கும் என்ஜாய்மென்ட் வேறெதிலும் இல்லை. மூன்று பேர், இரண்டு இருக்கைகள் இருந்தாலே போதும். ஸ்டார்ட் மியூசிக். முழுக்க முழுக்க ஃபன் ஃபில்டு கேம் இது. நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

சுத்தம் செய்வது:
சுத்தம் செய்வது
சுத்தம் செய்வது

விளையாட்டுனு சொல்லிட்டு, இது என்ன சுத்தம் செய்றதுன்னு ஷாக் ஆகாதீங்க. சுத்தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அவர்களுடைய உடைமைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி முதலிய எளிய வழிமுறைகளை வீட்டிலிருக்கும்போதே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். வீட்டைச் சுத்தம் செய்வது, தங்களின் படுக்கையைச் சுத்தமாக வைத்துக்கொள்வது என சிறு சிறு டாஸ்க்குகளை வைத்து, அவர்களுக்கு ஏற்றவாறு சொல்லிக்கொடுக்கலாம். நிச்சயம் இது பல மாற்றங்களைக் கொண்டுவரும். ஏனென்றால், தற்போதைய காலகட்டத்தில் சுத்தம்தானே எல்லாமுமாக இருக்கிறது.

சமையல்:
சமையல்
சமையல்

'எனக்கு பையன்தான் இருக்கான். அவனுக்கு எதுக்கு சமையல்லாம்'னு உடனே கேக்காதீங்க. ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ இருவருக்கும் சமைப்பதன் முக்கியத்துவத்தைச் சொல்லிக்கொடுப்பது அவசியம். தங்களின் வேலைகளைத் தாமே செய்துகொள்வதன் அடிப்படையைக் கற்றுக்கொடுக்க இந்த நாள்கள் மிகப் பெரிய அளவில் உதவும். லீவ் நல்லதுதான்... ஆனா இந்தக் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லையே என வருத்தப்படாமல், இதுபோன்ற விளையாட்டுகளை எல்லாம் அவர்களோடு சேர்ந்து விளையாடி, உற்சாகப்படுத்தி, உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்ளவும் இந்த நாள்கள் உதவும். உண்மையான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். ஏன்னா இது உங்களுக்கு கிடைச்சிருக்கிற மிகப் பெரிய வாய்ப்பு. ஸோ, டோன்ட் மிஸ் இட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு